ஜெ.வுக்கு பின் சரியான தலைமை நடிகர் அஜித்.. முதல்வர் விஜய் ஜோதிடர் ‘ஷாக்’ பேச்சு!

Published On:

| By Mathi

Ajith is right leader after Jayalalithaa: Vijay’s astrologer

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் சரியான தலைமையாக இருந்தது நடிகர் அஜித்தான்.. அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதால் விஜய்யை சந்தித்தேன் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

‘கலாட்டா’ ஊடகம் சார்பாக விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றிவேலுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை ஜோதிடர் ஷெல்வின் வழங்கினார்.

ADVERTISEMENT

இந்த விருது நிகழ்ச்சியில் ரதன் பண்டிட் வெற்றிவேல் பேசியதாவது: இந்த அஸ்ட்ராலஜிங்கிறது ஒரு கிரேட்டஸ்ட் சப்ஜெக்ட். இது தமிழ்நாட்டுடைய சப்ஜெக்ட். இப்போ உதாரணத்துக்கு ஐப்பசி மாசத்துல அடைமழை பெய்யும், சித்திரை மாசத்துல சூரியனும் அக்னி நட்சத்திரமும் வரும். இதெல்லாம் தமிழ் பஞ்சாங்கத்து பிரகாரம் தமிழ்நாட்டுல நடக்கும்.

இதே பஞ்சாங்கத்தைத்தான் த்ரூ அவுட் தி வேர்ல்டு நம்ம யூஸ் பண்றோம். டெல்லியில ஐப்பசி மாசம் அடைமழை பெய்யறதுல்ல, அக்னி நட்சத்திரம் டெல்லியில சித்திரை மாசத்துல வராது. அப்போ இந்த அஸ்ட்ராலஜியோட அடிப்படையே தமிழ்நாடுதான்.

ADVERTISEMENT

ஒரு காலகட்டத்துல பாவர்ட்டியில ரொம்ப தொந்தரவு பண்ணிட்டு இருந்தபோது, பெரியார் மாதிரி ஒருத்தர் நம்மள காப்பாத்துறதுக்காக உள்ள வராரு.

வறுமையை ஒழிக்க வந்த பெரியார்

பாவர்ட்டியிலிருந்து காப்பாத்துற பேர்ல நம்ம ஆன்மீகம் லைட்டா தடுக்கப்பட்டுருச்சு. ஆன்மீகத்தோட கனெக்டட் ஆனதுதான் ஜோதிடம். இப்போ தைப்பூசத்துல முருகனைப் போய் கும்பிடுறோம். தை மாசத்துல வர்ற பூச நட்சத்திரம் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்றது அஸ்ட்ராலஜியர்தான்.

ADVERTISEMENT

இந்த அஸ்ட்ராலஜியையும் தெய்வீகத்தையும் பிரிக்கவே முடியாது. அப்போ தெய்வீகம் தடுக்கப்படுற பொழுது அஸ்ட்ராலஜியும் சேர்த்து தடுக்கப்பட்டுருச்சு. ஆனா இது தமிழ் சாஸ்திரம். தமிழ்நாட்டில் உருவான அல்லது இலங்கையில் உருவான ஒரு சாஸ்திரம். சோ, இது போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது. எல்லாத்துக்கும் ஒரு மெண்டர் வேணும்.

கடவுள் ஆசி எங்ககிட்ட இருக்கு

இப்போ நான் விஜய் சாரைப் பார்க்கிற பொழுது, பிகினிங்ல நாங்க பார்த்துப் பழகுகிற பொழுது அது வேற மாதிரி ஒரு உலகத்துக்குள்ள நாங்கள் இருந்தோம். தொடர்ந்து இயர் பை இயர் நாங்க எடுத்துட்டுப் போறோம். இந்த ஜோதிடங்கிறது இட்ஸ் நாட் தியரி. பிராக்டிகலா ஒரு விஷயத்தை அடையறதுக்கு பயன்படுற ஒரு அற்புதமான சைக்காலஜி. காட்ஸ் கிரேஸ் எங்க மாதிரி ஆட்கள்கிட்ட இருக்கு.

இன்னும் 20,25 வருஷம் நாங்கதான்..

ஜோதிடர் ஷெல்வின் எனக்கு சீனியர்.. மே பி அனதர் 20-25 இயர்ஸ் அஸ்ட்ராலஜி எங்க ரெண்டு பேத்துனால எடுத்துட்டு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆக்சுவலா இது காப்பாற்றப்பட வேண்டிய ஒரு அற்புதமான தொழில்.

லக்லி நாங்கள் ரெண்டு பேரும் இருக்கறதுனால, ஒரு ஈகோ இல்லாத பிரதர்ஸ் மாதிரி அழகா எடுத்துட்டுப் போகப்போறோம்.

ஜெ.வுக்கு பின் அஜித்தான்..

திமுக, அதிமுக.. ஜெயலலிதாவும் கலைஞரும் இறந்துட்டாங்க… இப்போ நான் எப்படின்னா ஐ அம் எ கிரிக்கெட்டர், ஜெயிச்சிட்டே இருக்கணும்னு ஆசைப்படுற ஒரு கிரிக்கெட்டர். வெற்றி மட்டும்தான் தேடுதல் ஒரு கிரிகெட்டருக்கு. ஒவ்வொரு மேட்சுக்கும் ஐ அம் கேப்டன். ஜெயிக்கணும்ங்கிற வெறியோட அலையிறோம்.

2016, 17லயே நான் அஜித் சாரை அப்ரோச் பண்ணிணேன். அன்பார்சுனேட்லி அப்ப அஜித் சார் கூட இருந்தவங்க என்ன சொன்னாங்கன்னா, அவர் உடல் ரீதியா தயாரா இல்லை, சோ அவர் அரசியலுக்கு வரலைன்னு சொன்னாங்க..

ஏன்னா, அம்மா இறந்த பிறகு அடுத்த தலைமைக்கான தகுதியும் அஜித்சாருக்கும் விஜய் சாருக்கும் இருந்துச்சு.

ஜாதகத்துல எந்த யோகம் இருக்கனும்?

2020க்குப் பிறகு நான் கன்சாலிடேட் ஆகி, அந்த ஜாதகத்துல அந்த யோகம் இருந்துச்சுன்னா… எப்படி ஒரு மனிதன் அரசாங்கத்தை ஆளுறேன்னா, புகழுடையவங்க ஜாதகத்துல சனியும் சுக்கிரனும் நல்லா இருக்கும். சனியும் சுக்கிரனும் இருக்கறதுக்காக ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆயிடலாம், ஃபிலிம்ல பெருசா வந்துரலாம். அப்போ அவங்க ஜனங்களை கவர்ந்துறாங்க. அதே ஜாதகத்துல ஒருவேளை செவ்வாய் நல்லா இருந்துச்சுன்னா, அவன் தொடர்ந்து ஜெயிக்கிறான், அது அரசியல். அதே ஜாதகத்துல சூரியன் நல்லா இருந்தா ஹி கேன் பி எம்எல்ஏ ஆர் எம்பி. அதே ஆளுடைய விதி வலுத்து இருந்தால் எந்த ஸ்டேட்டஸையும் ரீச் பண்றான்..

அந்த மாதிரி ஒரு அற்புதமான ரெண்டு அதிர்ஷ்டசாலி ஜாதகம்தான் நம்ம விஜய் சாரும், அஜித் சாரும்.

5001% சொன்னேன்..

நான் யோசிக்காம விஜய் சார்கிட்ட 5001% நீங்கதான் 2026 மே மாதத்தில் சீப் மினிஸ்டருன்னு சொன்னேன்.. பல வருடங்களாக, ஒரு 6,7 வருஷமா சொல்லி இருப்பேன். யூடியூப்ல வீடியோ எல்லாம் போட்டிருக்கிறேன். எனக்கு நல்லா தெரியும்..அவரால் முடியும்னு.. அதனால நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன்.

லாஸ்ட் ஒன் இயர்ல நான் நிறைய பொலிட்டிஷியனால சேஸ் செய்யப்பட்டேன், தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு மினிஸ்டர் என்னைக் கேட்டாரு: “நீங்க போன மாசம் கட்சி ஆரம்பிச்சிட்டு, இந்த மாசம் எலக்‌ஷன் வரும்.. அடுத்த மாசம் சிஎம் ஆயிருவீங்களோ நாங்க எல்லாலாம்?” அப்படின்னாரு. இது ஒரு டெமாக்ரடிக் கன்ட்ரி. யார் வேணாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேணாலும் வரலாம். அப்ப அந்த சுக்கிரன், சனி, சூரியன், செவ்வாய் வலுத்த ஒரு பெரிய மனிதன்தான் நம்ம விஜய் சார்.

ஜெ.வுடன் எல்லை மீறிய குளோஸ் நான்..

நான் ஒரு ஃபோக்கஸ்ட் ஆள்.. நான் யாரோ ஒருவர் கூட சேர்ந்து வருஷக்கணக்கா வேலை செய்வேன்.. ஒரு காமன் டூ ஆல் மாதிரி இருக்கமாட்டேன்..
நான் ஜெயலலிதா கூட ஒரு 2000 தடவை சந்திச்சிருப்பேன், 1000 தடவை சாப்பிட்டிருப்பேன்.. அவங்களும் நானும் அவ்வளவு குளோஸ்… குளோஸ்னா எல்லை மீறுன குளோஸ்.

திமுக- அதிமுக சேர்ந்து வருவாங்க..

அங்கிருந்து அப்படியே இங்க விஜய் சாரோட டிராவல் ஆயிடுறேன். நான் போன டைம் சொல்லி இருந்தேன்.. அடுத்த 2031 எலக்ஷன்ல டிஎம்கேவும் ஏடிஎம்கேவும் சேர்ந்து எங்களை எதிர்த்து வருவாங்க பாருங்கன்னு சொன்னேன்.. அடுத்த எலக்ஷன்ல விஜய் சாரை ஜெயிக்கணும்னா தே ஹவ் டூ டைப் டுகெதர்.. இது டிஎம்கே ஏடிஎம்கே சேர்ந்துதான் வருவாங்க.. இவ்வாறு ரதன் பண்டிட் வெற்றிவேல் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share