ராகுல் காந்தியை கஃபேவுக்கு அழைத்துச் சென்ற விஜய்

Published On:

| By Kavi

பாலவாக்கத்தில் உள்ள கஃபேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் அழைத்துச் சென்றார்.

சென்னை தீவு திடலில் இன்று (அக்டோபர் 10) மாலை மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடவுள்ளார்.

ADVERTISEMENT

இதற்காக சென்னை வந்த அவர், அங்கிருந்து நேராக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்றார்.

தனது வீட்டுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரை, வாசலுக்கு வந்து கட்டியணைத்து அழைத்துச் சென்றார் முதல்வர் விஜய்.

ADVERTISEMENT

பின்னர் முதல்வர் வீட்டிலேயே ராகுல் காந்திக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வருகின்றன.

தொடர்ந்து தனது காரில் முதல்வர் விஜய், ராகுல் காந்தியை பாலவாக்கத்தில் உள்ள கஃபேவுக்கு அழைத்துச் சென்றார்.

ADVERTISEMENT

அங்கு முதல்தளத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டே tiramisu jar, cappuccino, americano iced coffee ஆகிய டெசர்ட் மற்றும் குளிர்ந்த காபியை அருந்தினர்.

இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய ராகுல் காந்தி, தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், பின்னர் மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share