ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் : கைதானவர்களை விடுவிக்க திமுகவினர் தர்ணா!

Published On:

| By Kavi

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

இந்தியா முழுவதும், எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை சேலம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. 

கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். 

ADVERTISEMENT

அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த சூழலில் அங்கு திமுக எம்பி-யும் துணை பொதுச்செயலாளருமான ஆ ராசா, முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பெசன்ட் நகருக்கு சென்றனர். 

ADVERTISEMENT

அங்கு தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர். 

குறிப்பாக ஆராசா, ‘இவர்களை விடுவிக்கவில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்று கூறினார். 

தொடர்ந்து போராட்டக்காரர்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு வெளியே ஆ ராசா, மா சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து அடைத்து வைத்திருந்த இளைஞர்களை போலீசார் விடுவித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share