முதல்வர் விஜய் வீட்டில் ராகுல் காந்தி

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார்.

சென்னை தீவுதிடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடவுள்ளார்.

ADVERTISEMENT

இதையொட்டி இன்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு சென்றார். காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.

முதல்வர் விஜய் ராகுல் காந்திக்கு தடல் புடல் விருந்து வைத்ததாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னைக்கு வருகைத் தந்த ராகுல் காந்தி முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share