Delhi Protest : விமானத்துக்கு உள்ளேயே வைத்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

Delhi

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற அபிஜித் திப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த விவகாரத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும், இளைஞர்களும் திரண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ‘கரப்பான் பூச்சி கட்சி’ இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினரிடம் இருந்து முறையான அனுமதி பெறப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; 27 ஆயிரம் காவல்துறை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, இணைய சேவைகளும் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த ‘கரப்பான் பூச்சி கட்சி’ நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் விமானத்திலேயே வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share