திமுகவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வியில் வெற்றி கிடைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது; இரண்டு தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இடைத்தேர்தலில் தவெக வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி; தவெகவைப் பொறுத்தவரை வெற்றியிலும் தோல்வி” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share