2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளைத் தவிர்த்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்டுகள் என ஐந்து முனைப் போட்டி நிலவியது.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இரண்டு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டாவது இடத்தையும், பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த அ.தி.மு.க. மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
மதுராந்தகம் தொகுதி நிலவரம்
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 24 பேர் டெபாசிட் இழந்தனர். இத்தொகுதியில் மொத்தம் 2,13,815 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,84,640 வாக்குகள் பதிவாகின.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மரகதம் குமரவேல் (தவெக) – 74,048
பரந்தாமன் (திமுக) – 54,008
கணிதா சம்பத் (அதிமுக) – 47,450
ஜானகிராமன் (நாதக) – 2,709
சுகந்தி ( சிபிஎம்) – 1,986
நோட்டா – 652
தாராபுரம் தொகுதி நிலவரம்
தாராபுரம் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 18 பேர் டெபாசிட் இழந்தனர். இத்தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,79,214 வாக்குகள் பதிவாகின.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சத்யபாமா (தவெக) – 66,841
சுகன்யா (திமுக) – 57,370
பானுமதி (அதிமுக) – 45,280
கார்த்திகா (நாதக) – 5,268
லட்சுமணன் (சிபிஐ) – 1,157
நோட்டா – 677
