வைஃபை ஆன் செய்ததும், “கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்”ன்னு பழைய பாடலை உற்சாகமாக பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ‘விருந்து’ கன்ஃபார்மாகிடுச்சோ?
ஆமாங்க ப்ரோ.. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளைக்கு சென்னைக்கு வர்றாரு இல்லையா? அவரை சந்திக்கிறதா இல்லையா? அவரை சந்திச்சா மோடியும் பாஜகவும் வருத்தப்படுமா இல்லையா?ன்னு சிஎம் விஜய் நீண்ட டிஸ்கஷன் நடத்துனதை பத்தி நாம பேசியிருந்தோம் இல்லையா? அதோட அப்டேட்தான் ப்ரோ..
இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் நாம பேசுனப்ப, “ராகுல் காந்தியை சந்திக்கிறது பத்தி நீங்க சொன்ன மாதிரி ரொம்ப சீரியசான டிஸ்கஷனை நடத்தினாரு சிஎம்.. அதுல பல கருத்துகள் முன்வைச்சாங்க.. கடைசியா ராகுல் காந்தியை சந்திச்சுடுவோம்ன்னு சிஎம் விஜய் முடிவெடுத்தார்…
ஆதவ் அர்ஜூனாதான் ராகுல் காந்தியை வரவேற்று விஜய் வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம்னு முடிவு செஞ்சிருந்தாங்க.. இப்ப ராகுல் காந்தியுடனான மீட்டிங்கை சிஎம் விஜய் கன்ஃபார்ம் பண்ணியிருக்கிறார்..
நாளைக்கு சென்னை வரும் ராகுல் காந்தி மதியம் சிஎம் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு வருகிறார்.. அங்க ராகுல் காந்திக்கு தடபுடலான விருந்து கொடுக்க ஏற்பாடுகள் ஜரூரா நடந்துகிட்டு இருக்கு..
ராகுல் காந்தியிடம் என்ன விஷயங்களை பேசலாம்.. ராகுல் காந்தி என்ன விஷயங்களை பேச சான்ஸ் இருக்குன்னு அட்வைசர் டீம், சிஎம்-க்கு சொல்லி இருக்கு.. அதுக்கு தகுந்த மாதிரி சிஎம் விஜய்யும் தயாரா இருக்கிறார்..”ன்னு ஷேர் பண்ணினாங்க ப்ரோ…
ராகுல் காந்தியை எப்படியாவது விஜய் சந்திக்கனும்னு ரொம்பவே மெனக்கெட்டு போராடி அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் ‘தலை’கள் இப்ப ரொம்பவே ஹேப்பியா இருக்கிறாங்களாம் ப்ரோ.. ஆனாலும் இந்த கிரெடிட் எனக்குதான் உனக்குதான்னு வழக்கம் போல காங்கிரஸுக்கு உரித்தானே மோதலும் ஆரம்பிச்சிருக்குன்னும் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
