வைஃபை ஆன் செய்ததும், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்”ன்னு சொன்னபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
ப்ரோ.. உங்களுக்குமா பிக்பாஸ் ஜூரமா?
ப்ரோ.. இப்ப நான் சொல்ல போறதும் பிக்பாஸ் மேட்டர்தான்.. பிரதமர் மோடி நாளை மறுநாள் அக்டோபர் 11-ந் தேதி சென்னை வருகிறார் இல்லையா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா முதல் பல நிகழ்ச்சிகளில் மோடியுடன் முதல்வர் விஜய்யும் கலந்துக்கிறார்..
இப்படி நாட்டின் பிரதமர் மோடி வரும் போது தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் மணிவாசன் திடீர்னு இன்னைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்…
ஒரு பிரதமர் வரும் போது ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செஞ்சுகிட்டு இருப்பாங்க.. இது எல்லாமே உள்துறை செயலாளர் கண்ட்ரோலில்தான் நடக்கிறதுதான்.. அப்படியான நிலைமையில திடீர்னு உள்துறை செயலாளர் மணிவாசனை தூக்கியடிச்சுட்டு புதிய உள்துறை செயலாளரா கார்த்திக் நியமிக்கப்பட்டிருக்கார்.
சிஎம் விஜய்யோட இந்த தடாலடி ஆக்ஷன்தான் கோட்டையில அத்தனை அதிகாரிகளிடையேயும் ரொம்பவே ‘ஷாக்’ நியூஸா பேசப்படுகிறது..
மோடி வரும் நேரத்துல திடீர்னு உள்துறை செயலாளரையே மாற்ற வேண்டிய ‘நெருக்கடி’ சிஎம் விஜய்க்கு எப்படி வந்ததுன்னு கோட்டை வட்டாரங்களில் நாம விசாரிச்சப்ப, “தலைமை செயலாளர் சாய்குமாருக்கும் அரசாங்கத்துல அவரைப் போல முக்கியமான பதவியில இருந்த உள்துறை செயலாளர் மணிவாசனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான்.. தான் சொல்ற எதையுமே மணிவாசன் கேட்கிறதே இல்லைங்கிறதுதான் தலைமை செயலாளரோட கோபம்.. எந்த விவகாரமாக இருந்தாலும் ரெண்டு பேருக்கும் ஒத்து போகவே இல்லை.. அதனால மணிவாசனை மாற்றித்தான் ஆகனும்னு சிஎம் விஜய்கிட்ட ரொம்பவே அழுத்தம் கொடுத்துகிட்டே இருந்தார் தலைமை செயலாளர் சாய்குமார்..
அவரைப் போல மணிவாசன் மேல ரொம்பவே அதிருப்தியில இருந்தவர் சிஎம் விஜய்யின் அட்வைசரான ஜான் ஆரோக்கியசாமி.. கோட்டையில ‘நிழல்’ சிஎம்மாக ஆக்டிவ்வா இருக்கிற ஜான் ஆரோக்கியசாமிக்கும் மணிவாசனுக்கும் நிறைய பிரச்சனைகளில் முரண்பாடுகள்.. அவருக்கும் நாம சொல்றதை செய்யமாட்டேங்கிறாரேங்கிற அதிருப்தி.. இதனால ஜான் ஆரோக்கியசாமியும் மணிவாசனை மாற்றனும்னு சிஎம் விஜய்க்கு நெருக்கடி கொடுத்துகிட்டு இருந்தார்.. அவங்க ரெண்டு பேரும் நினைச்சது இப்ப நடந்துருச்சு”ன்னு சொல்றாங்க ப்ரோ.
அங்கிட்டும் அங்கிட்டும் நெருக்கடி கொடுத்து மாற்றுனது ஒரு ஐஏஎஸ் அதிகாரியை இல்லை.. மாநிலத்தின் உள்துறை செயலாளரை.. அதுவும் பிஎம் மோடி வரும் நேரத்துல மாத்தியிருக்கிறதால பெருசா குழப்பம் வந்துடுமோன்னு கோட்டையில இருக்கிற சீனியர் அதிகாரிகள் செம்ம டென்ஷனில் இருக்கிறாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
