இடைத்தேர்தல் 2026: விஜய்யின் கூட்டணி அரசு நிலைப்பாட்டுக்கு மக்கள் அங்கீகாரம் – திருமாவளவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Deputy CM Thirumavalavan

‘கூட்டணி அரசு’ என்கிற தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடித்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பதிவில், “மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும்சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

ADVERTISEMENT

கடந்த பொதுத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, ‘கூட்டணி அரசு’ என்கிற தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.

‘விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியேவெற்றி பெறும்’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share