மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் காணலாம்
- தாராபுரம் 14-வது சுற்று முடிவு:
தவெக- சத்தியபாமா 41327
திமுக சுகன்யா 33263
அதிமுக- பானுமதி 27561
நாதக கார்த்திகா 3361
சிபிஐ லட்சுமணன் 734 - மதுராந்தகம், தாராபுரத்தில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது
- தாராபுரத்தில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை
- தாராபுரத்தில் தவெக- அதிமுக இடையே கடும் போட்டி
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தொடர்ந்து தவெக முன்னிலை
- மதுராந்தகம் 3 சுற்று முடிவுகள்: தவெக மரகதம் குமரவேல் 12075; திமுக பரந்தாமன் 8914; அதிமுக கணிதா சம்பத் 6759.
- தாராபுரம் 5 சுற்றுகள் முடிவு: தவெக சத்தியபாமா 13213; அதிமுக பானுமதி 12489; திமுக சுகன்யா- 11554
- புதுச்சேரி தட்டாஞ்சாவடி: அசோக் ஆனந்தன் (என்.ஆர். காங்கிரஸ்)- 13,358; தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் விநாயகம் -4876 ; திமுக சேது என்ற சேது செல்வம்-2664 ; என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தன் வெற்றி.
- தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் சிபிஐ, சிபிஎம்-க்கு 5-வது இடம்
- தாராபுரம் தொகுதியில் 4 சுற்றுகளில் பின் தங்கி இருந்த தவெக தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
- புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி; என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி
தாராபுரம்: அதிமுக 8,244; தவெக 7434; திமுக 6158, நாதக 519; சிபிஐ 178 - மதுராந்தகம்: தவெக- 15,509; திமுக 11,187; அதிமுக 9,691; நாதக 154; சிபிஎம் 70
- புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை; காங்கிரஸ் 2-வது இடம்; திமுக 3-வது இடம்
- மதுராந்தகத்தில் திமுக 2-வது இடத்தில் முன்னிலை
- தாராபுரத்தில் திமுக 3-வது இடம்
- தாராபுரத்தில் அதிமுக முன்னிலை- சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்
- மதுராந்தகத்தில் 3-வது சுற்றிலும் தவெக முன்னிலை
- தாராபுரத்தில் 3-வது சுற்றிலும் அதிமுக முன்னிலை
- தாராபுரம் இரண்டாவது சுற்றில் அதிமுக முன்னிலை; அதிமுக 5573; தவெக 4978; திமுக 4013
- மதுராந்தகம் தொகுதியில் தவெக முன்னிலை; தவெக 4906; திமுக 3514; அதிமுக; 2818
- தாராபுரம் முதல் சுற்றில் அதிமுக முன்னிலை; அதிமுக 2,639; தவெக 2,634; திமுக 2,019
- தாராபுரம்- தவெக 1,350; திமுக 870; அதிமுக 643 முன்னிலை
- மதுராந்தகம் தொகுதியில் தவெக முன்னிலை; தவெக 3571; திமுக 2611; அதிமுக 2078
- தாராபுரம் தபால் வாக்குகள்: தவெக 268; திமுக 167; அதிமுக 173
- புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன
- 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
- மதுராந்தகத்தில் 893 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
- இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றப் பயிற்சி மையத்தில் மதுராந்தகம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாராபுரம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்படுகின்றன.
- வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் சட்டசபை இடைத்தேர்தல்
- கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. மதுராந்தகத்தில் சுமார் 7 சதவீதம், தாராபுரத்தில் சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளன.
- மதுராந்தகம் தொகுதியில் 86.26% வாக்குகள் பதிவாகின. தாராபுரம் தொகுதியில் சுமார் 80.30% வாக்குகள் பதிவாகின.
- அக்டோபர் 6-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
- மதுராந்தகம் தொகுதியில் 2,13,788 வாக்காளர்கள்; தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள்
- மதுராந்தகம் இடைத்தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரம் இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 49 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தற்போது தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இதனால் ஒரே தொகுதியில் 2 வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளராக அவர் அடுத்தடுத்து தேர்தலைச் சந்தித்துள்ளார்.
- கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
- மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.
- தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டனர்.
- மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் போட்டியிட்டார். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியபாமா போட்டியிட்டார்.
