இடைத்தேர்தல் 2026: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக 3-வது இடம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தவெக 37,944 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. திமுக 31,043 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக 26,266 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேபோல், மதுராந்தகம் தொகுதியில் 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தவெக 38,128 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. திமுக 25,354 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக 21,537 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ADVERTISEMENT

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போதைய சூழலில் அது 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share