தட்டாஞ்சாவடியில் தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி; என்.ஆர். காங்கிரஸ் வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிறுவனரும், அப்போதைய முதல்வருமான என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் மங்கலம் தொகுதியைத் தன்வசம் வைத்துக்கொண்டு, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி அதிகாரப்பூர்வமாகக் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 6 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேச்சைகள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திக் குமாரி ஆகியோர் களம் கண்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் குமார் 13,358 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தவெக ஆதரவுடம் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் சேது செல்வம் 2,664 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share