மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடை பெற்று வருகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்யபாமா ஆகிய இருவரும் 20 நாட்களுக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை தொடர்ந்து தாராபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை அடுத்து, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
தாராபுரம் தொகுதியின் இரண்டாவது சுற்றில் அதிமுக 5573 , வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள நிலையில், தவெக 4978வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், திமுக திமுக 4,013 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதிமுக வேட்பாளர் பானுமதி 595 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் இரண்டாவது சுற்றில் தவெக 4906 வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும், திமுக 3514 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக 2,818 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1392 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
