6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, கே.என்.நேரு வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை… அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு!

Published On:

| By Mathi

Madras High Court

6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) வழங்க இருந்தது. ஆனால் இந்த 2 வழக்குகளிலும் தீர்ப்பு வழங்குவது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதேபோல, நகராட்சி நிர்வாக துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதும் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று நீதிமன்ற அமர்வில் பங்கேற்காததால், இந்த 2 வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த இரு வழக்குகளின் தீர்ப்புகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share