புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி.. திமுக வேட்பாளர் உட்பட 9 பேர் டெபாசிட் இழப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் உள்ளிட்ட 9 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் கே.சேது என்ற சேதுசெல்வம் 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.எம்.சலீம் 310 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.கார்த்திகுமாரி 172 வாக்குகளையும் பெற்றனர்.

ADVERTISEMENT

சுயேச்சை வேட்பாளர்களான ஏ.ரகு 70 வாக்குகள், எஸ்.வசந்தி 57 வாக்குகள், ஆர்.ஜெயபாலன் 35 வாக்குகள், எம்.நித்யா 28 வாக்குகள், ஆர்.சாமிநாதன் 8 வாக்குகள் பெற்றனர். இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் கலைவாணன் 54 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 225 வாக்குகள் பதிவாகின.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த், 2-வது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ.விநாயகம் ஆகியோர் மட்டுமே டெபாசிட்டைத் தக்க வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

திமுக வேட்பாளர் கே.சேது, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ.எம்.சலீம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.கார்த்திகுமாரி உள்ளிட்ட மற்ற 9 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share