டிஜிட்டல் திண்ணை: ராகுல் காந்தியை சந்திக்கனுமா? விஜய் நடத்திய சீரியஸ் டிஸ்கஷன்- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Vijay-Modi-Rahul Gandhi

வைஃபை ஆன் செய்ததும், “இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்..”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இது விஜய்- சூர்யாவின் பாடலாச்சே.. இப்ப எதுக்கு?

இல்லைங்க ப்ரோ.. பாடல் வரிகள் செம்ம வைபில் இருக்கேன்னுதான்.. நாம விஷயத்துக்கு போவோமே.. நாளை மறுநாள் அக்டோபர் 10-ந் தேதி ராகுல் காந்தியும் அதுக்கு அடுத்த நாள் மோடியும் சென்னைக்கு வர்றாங்க ப்ரோ..

ADVERTISEMENT

ராகுல், மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வர்றதால சிஎம் விஜய்யின் தவெகவிலதான் செம்ம டென்ஷன்.. இதனால காங்கிரஸ், பாஜக ‘தலை’கள் அப்படி நடக்குமா? இப்படி நடக்குமா?ன்னு பரபரப்பா இருக்காங்க..

என்னதான் நடக்குதுங்க ப்ரோ?

தேர்தலின் போதும் தேர்தலுக்கு பின்னாடியும் திமுக கூட்டணியில இருந்து காங்கிரஸ் வெளியே போவதை சோனியா காந்தி எப்பவும் விரும்பியது இல்லை.. தொகுதி பங்கீட்டு விவகாரத்துல ராகுல் காந்தி ரொம்பவே இழுத்தடிச்சப்ப சோனியா காந்திதான் ப.சிதம்பரம் போன்ற சீனியர்களை இறக்கிவிட்டு சிக்கலை தீர்த்து வெச்சாங்க..

ADVERTISEMENT

சோனியாவை மீறிதான் விஜய்க்கு ராகுல் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்.. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு, தவெக ஆட்சி அமைக்க சப்போர்ட் கொடுங்கன்னு சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் லீடர்ஸ்கிட்ட ராகுல் காந்தியே பேசுனது, மல்லிகார்ஜூன கார்கேவை திருமாவளவன்கிட்ட பேச வைச்சதுன்னு விஜய்க்காகவே ‘இறங்கி’ வேலை செஞ்சவர் ராகுல் காந்தி.. இதற்கு பலனா காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கிடைச்சது.. இவ்வளவுக்கும் ‘தூதரா’க இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் கொடுத்தார் விஜய்..

இவ்வளவும் ‘தேனிலவு’ காலம் மாதிரி கொஞ்ச நாளிலேயே கசந்து போய் ராகுல்- விஜய் உறவில விரிசலும் தொடங்கியது..

ADVERTISEMENT

இதை பத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சிலரிடம் நாம பேசுனப்ப, “விஜய்க்காக ராகுல் காந்தி எவ்வளவோ செஞ்சாரு.. விஜய் ஆட்சியை தக்க வைக்கிற நோக்கத்துக்காக காங்கிரஸ் கட்சிக்கும் சில விஷயங்கள் செஞ்சாரு.. ஆனா ஆட்சியில உட்கார்ந்த பிறகு எங்ககிட்ட அந்த பழைய நெருக்கத்தை குறைக்க ஆரம்பிச்சுட்டாரு விஜய்..

தவெக அமைச்சர்களோ, காங்கிரஸை வேண்டா விருந்தாளியை போலதான் பல நேரங்களில் நடத்துகிறார்கள்.. பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜய்யை முன்னிறுத்தி தவெக அமைச்சர்களே பேசுனப்ப எங்களுக்கு எப்படி வலி இருந்திருக்கும்? நாடு முழுவதும் 2029-ல் ராகுல்தான் பிரதமர்னு நாங்க பிரசாரம் செய்யுறோம்..ஆனா வட மாநிலங்களில் போய் விஜய்தான் பிரதமர்னு தவெக, இன்ப்ளூயன்சர்ஸ் மூலமா வேலை செஞ்சா எங்களுக்கு கடுப்பு வரும்தானே..

நீட் தேர்வு, எஸ்ஐஆர் பிரச்சனைன்னு எத்தனையோ விவகாரங்களில் ராகுல் காந்தி தீவிரமா தெருவில இறங்கி போராடுறாரு.. டெல்லி வீதிகளில் போலீஸ் அவரை பந்தாடுது.. ஆனா விஜய், ஒரு கூட்டணி கட்சி தலைவராக கூட ரியாக்‌ஷன் காட்டாம இருக்கிறார்.. திமுக கூட இருந்தப்ப எங்களுக்கு அவங்க மாரல் சப்போர்ட்டா இருந்தாங்க.. எங்க மேல கை வெச்சாலே திமுக கிட்ட இருந்து முதல் ரியாக்சன் வரும்.. இங்கே ‘வருமா வராதா?’ன்னு நாங்க காத்துகிடக்க வேண்டியது இருக்கு..

நாங்கதான் தவெக கூட்டணியிலேயே இணைஞ்சுட்டோம்.. விஜய் கூட்டிய 2 கூட்டங்களிலும் கலந்துகிட்டோம்.. ஆனா டெல்லியில நடக்குற ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்துக்கு தவெக வராது… கேட்டா எங்களுக்கு எம்.பி.க்கள் இல்லையேன்னு ஒரு சப்பை கட்டு.. என்னங்க சார் லாஜிக் இது?

டெல்லியில நடக்குற இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு வராத தவெக சத்தியமூர்த்தி பவனில் நடக்குற இந்தியா கூட்டணி கூட்டத்துல தலையை காண்பிக்கிறது எல்லாம் என்ன அணுகுமுறைன்னு தெரியலையே..

தவெகவோட இந்த போக்கை எல்லாம் நல்லா பாருங்க.. அவங்க பாஜகவுக்கு பயப்படுறாங்கன்னுதானே தெரியுது.. இது எங்க தலைவர் ராகுல் காந்திக்கு தெரியாமலே இருக்கும்?”ன்னு சொல்றாங்க ப்ரோ.

இவ்வளவு குமுறலா ப்ரோ.. இப்ப ராகுல் காந்தியை விஜய் சந்திப்பாரா இல்லையா? ப்ரோ..

ராகுல் காந்தி 10-ந் தேதி சென்னை தீவு திடலில் மாலையில நடக்கிற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில கலந்துக்கிறார்.. அவரையும் விஜய்யையும் எப்படியாவது சந்திக்க வெச்சுடனும்னு தமிழக காங்கிரஸ் ‘தலை’கள் ரொம்பவே தீவிரமா ‘முயற்சி செஞ்சாங்க..

இதை பத்தி விஜய்க்கு நெருக்கமான அமைச்சர்கள் தரப்புல விசாரிச்சப்ப, “ காங்கிரஸ் கட்சிதான் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது.. இதை நாங்க மறுக்கலை.. அதுக்காகவே 2 அமைச்சர் பதவி, எம்பி பதவி எல்லாம் கொடுத்துட்டோம்..

நாங்க ஆளும் கட்சி சார்.. காங்கிரஸ் எடுக்கிற எல்லா முடிவுகளையும் எடுக்க முடியாது இல்லையா? டெல்லியில பாஜக ஆட்சி நடக்குது.. போன திமுக கவர்மெண்ட் இதே மாதிரிதான் காங்கிரஸுக்காகவே டெல்லியுடன் மோதுச்சு.. தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே நல்லது நடக்கலை..

நாங்க அரசியல் ரீதியா காங்கிரஸ் கட்சியை ஆதரிச்சாலும் நிர்வாக ரீதியாக டெல்லி பாஜக அரசுடன் இணக்கமா போகனும்னு நினைக்கிறோம்.. அதுதான் எங்க சிஎம் விஜய்யின் பாலிசி.

இப்ப ராகுல் காந்தியும் மோடியும் அடுத்தடுத்து சென்னைக்கு வர்றாங்க.. இதை பத்தி சிஎம் முக்கியமான டிஸ்கஷன் நடத்தினார்..

அப்ப, ”திமுக மாதிரி பாஜகவை அரசியல் ரீதியா நாம எதிர்க்கனுமா? ராகுல் காந்தியை சந்திச்சா பாஜக வருத்தப்படுமே.. பாஜகவை ‘பகைக்கிற’ மாதிரி ராகுல் காந்தியை சந்திக்கனுமா?”ன்னு ஒரு கேள்வி வந்துச்சு.

அதே மாதிரி, ”ராகுல் காந்தியை சந்திச்சே ஆகனும்னு எதுவும் கட்டாயம் இல்லையே.. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிக்கு வர்றாரு அவ்வளவுதானே.. போன ஆகஸ்ட் 1-ம் தேதி கூட மாமல்லபுரம் வந்தாரு.. அப்ப நாம சந்திக்கலையே.. அதே மாதிரி இப்பவும் ராகுல் வரட்டும்… போகட்டும்.. நாம பிஎம் மோடியை நல்லபடியா வரவேற்று நல்லபடியா அனுப்பி வைக்கிறதுல மட்டும் கவனம் செலுத்துவோம்.. நமக்கு கட்சி ரீதியாகவே ஏற்கனவே கரூர் விவகாரத்துல சிபிஐ கேஸ் இருக்குது.. தேவை இல்லாம டெல்லியை சீண்டுற வேலையே வேண்டாம்”ன்னு இந்த டிஸ்கஷனில் சிலர் சொன்னாங்க..

இன்னொரு பக்கம், “என்ன இருந்தாலும் ராகுல் காந்தியை நாம் புறக்கணிக்க கூடாது.. காங்கிரஸ் நமக்கு ரொம்பவே முக்கியம்.. அதனால ராகுல் காந்தியை சந்திக்கலாம்”ன்னும் ஒப்பீனியன் வந்துச்சு.. எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுகிட்ட சிஎம் விஜய், கடைசியா, ”சரி.. ராகுல் காந்தியை சந்திக்கலாம்”னு முடிவெடுத்திருக்கிறார்”ன்னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ..

அதாவது அக்டோபர் 10-ம் தேதி சென்னை வர்ற ராகுல் காந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வரவேற்று விஜய் வீட்டுக்கு அழைச்சுகிட்டு வருகிறாராம்.. விஜய்யுடன் ‘விருந்து’ சாப்பிட்டபடியே பொலிட்டிக்கல் டிஸ்கஷன் நடக்கும்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share