மதுராந்தகம்: தவெக மரகதம் குமரவேல் 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published On:

| By Mathi

Madurantakam Bypoll

மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதுராந்தகம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) எண்ணப்பட்டன.

ADVERTISEMENT

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்:

  • மரகதம் குமரவேல் (தவெக) – 70,916 வாக்குகள்
  • பரந்தாமன் (திமுக) – 51,672 வாக்குகள்
  • கணிதா சம்பத் (அதிமுக) – 46,436 வாக்குகள்
  • நாம் தமிழர் கட்சி – 1,753 வாக்குகள்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 1,389 வாக்குகள்
    வெற்றி வித்தியாசம்: 19,244 வாக்குகள்.

திமுக வேட்பாளர் பரந்தாமனை 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் தவெகவில் இணைந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மதுராந்தகத்திலும் தவெகவின் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

தற்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 70,916 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் பெற்றதைவிட இந்த முறை 1,632 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்திருந்தனர். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போதைய இடைத்தேர்தலில் திமுக 51,672 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த பொதுத் தேர்தலைவிட 8,166 வாக்குகள் குறைவாகும். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 62,090 வாக்குகள் பெற்ற தவெக, தற்போது மரகதம் குமரவேலை வேட்பாளராக நிறுத்தி 70,916 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது தவெகவின் முந்தைய வாக்குகளைவிட 8,826 அதிகம்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share