ஒன்றிய அரசின் ஆதரவு… கூட்டு ஒத்துழைப்பு : மோடி ராகுலுக்கு விஜய் நன்றி!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விஜய்க்கு நேற்று வாழ்த்து கூறினர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் மோடிக்கும், ராகுலுக்கு விஜய் இன்று (மே 5) நன்றி கூறியுள்ளார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள பதிவில், “வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நலனே எங்களின் ஒரே இலக்காகத் தொடர்கிறது. அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்

ADVERTISEMENT

ராகுலுக்கு நன்றி தெரிவித்துள்ள பதிவில், ‘மக்களவையின்  எதிர்க்கட்சித் தலைவருக்கு, தொலைபேசி அழைப்பிற்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

பொதுச் சேவையில் சிறந்து விளங்கவும், கூட்டு ஒத்துழைப்பு தேவைப்படும் நமது மாநிலத்தின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியுடன் இருப்போம்.

ADVERTISEMENT

அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share