தமிழக முதல்வராக மே 7ல் விஜய் பதவியேற்பு?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விஜய்க்கு முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் அவசியம்.

தற்போதைய நிலையில் தவெக-விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரத் திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆளுநரைச் சந்திப்பதற்கான நேரம் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, அடுத்த இரண்டு வாரங்களில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாகத் தவெக தரப்பில் கடிதம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் மே 7ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பதவியேற்பு விழாவைச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share