வைஃபை ஆன் செய்ததும், “வசந்தமே இனி எந்நாளும் வானிலும் ஏது வாழ்விது போலே”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. வித்தியாசமான சாங்கா இருக்கே..
ஆமாங்க ப்ரோ.. நம் கண்ணில் படுவதும் காதில் விழுவதும் எல்லாமே வித்தியாசமும் விசேஷமும்தானே..
பிரதமர் மோடியும் சிஎம் விஜய்யும் இன்னைக்கு பல நிகழ்ச்சிகளில்ல ஒன்னா கலந்துகிட்டாங்க இல்லையா?
இந்த நாளில்தான் நிறையவே ‘சம்பவங்கள்’ நடந்துருக்குங்க ப்ரோ..

இதை பத்தி பாஜக வட்டாரங்களில் விசாரிச்சப்ப, ”காலையில ஏர்போர்ட்ல பிரதமர் மோடியை சிஎம் விஜய் வரவேற்க காத்திருந்தார்.. அப்ப பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில விஜய்க்கு சால்வை அணிவித்து போட்டோ எடுத்துகிட்டார் நயினார்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கூட இருந்தார்..
இந்த சந்திப்பில “உங்களை பார்க்கனும்”ன்னு நயினார் நாகேந்திரன் கேட்க.. “நீங்க எப்ப வேணும்னாலும் வந்து சந்திக்கலாமே”ன்னு விஜய் பதில் தந்தார். பாஜகவில கராத்தே தியாகராஜன், ஷெல்வி தாமுன்னு பல பாஜக தலைவர்களும் விஜய்யை சந்திச்சாங்க.. அப்ப அமைச்சர்களில் புஸ்ஸி ஆனந்த் மட்டும்தான் இருந்தார்..
ஏர்போர்ட்ல மேயர் பிரியாவும் சிஎம் விஜய்யை பார்த்து வணக்கம் வைச்சாங்க.. சிஎம் விஜய்யும் பதிலுக்கு சிரிச்சபடியே வணக்கம் வைத்தார்..








அதுக்கு பிறகு பிஎம் மோடி வந்தப்ப சிஎம் விஜய், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரும் வரவேற்றாங்க..
பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, மெட்ரோ ரயில் பயணம், ரூ13,000 கோடி திட்டங்கள் விழான்னு அமர்க்களமா நடந்துச்சு..

பிரதமர் மோடி ஐஐடி புரோகிராம்ஸை முடிச்சுட்டு டெல்லி ரிட்டர்ன் ஆகும் போது அவரை வழியனுப்பி வைக்க சிஎம் விஜய் ஏர்போர்ட்டுக்கு போனாரு.. ஆனால் பிரதமர் மோடி வர்ற ரொம்பவே லேட்டாகிடுச்சு..
சிஎம் விஜய், பிஎம் மோடிக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிகிட்டு இருந்தார்.. ஒன்றரை மணிநேரம் சிஎம் விஜய் வெயிட் பண்ணினார்.. அப்ப மதிய லஞ்ச் டைம் வேற.. சிஎம் விஜய் வீட்டுல இருந்து சாப்பாடு வந்தது.. ஏர்போர்ட்லேயே விஜய் சாப்பிட்டு பிஎம் மோடிக்காக காத்திருந்தார்..

அதுக்கு பிறகு பிஎம் மோடி ஏர்போர்ட் வந்தார்.. அப்ப பிஎம் மோடியும் சிஎம் விஜய்யும் சுமார் 20 நிமிஷம் தனியாக ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருந்தாங்க.. இந்த பேச்சுவார்த்தை முடிஞ்ச பிறகு மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தார் விஜய்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
