சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் சந்திப்பு.. கிருஷ்ணா நதி நீர் குறித்து ஆலோசனை!

Published On:

| By Mathi

ChandraBabu Naidu-Vijay

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) விஜயவாடாவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்ற முதல்வர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று விஜய் சாமி தரிசனம் செய்தார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் இன்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது முதல்வர் விஜய்யை சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகோஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இச்சந்திப்பில், தமிழகத்துக்கான கிருஷ்ணா நதி நீரை முழுமையாக வழங்குவது, கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் நடப்பாண்டில் அக்டோபர் 9-ந் தேதி வரை 2.251 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. அதனால் தமிழ்நாட்டுக்கான கிருஷ்ணா நதிநீரை முழுமையாக திறந்துவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share