சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் மயிலம் தொகுதியில், போட்டியிட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து வாக்காளர் கமலக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கேட்டு அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் நிராகரிப்பு மனு தாக்கல் செய்தார்
அதில் எந்தவித முறைகேடும் தேர்தலில் செய்யவில்லை. எனவே எனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மயிலம் சட்டமன்ற எம்எல்ஏ சிவி சண்முகத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, வாக்காளர் கமலக்கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
