டிஜிட்டல் திண்ணை: ஜெம் வீரமணி கேஸ்.. ”தங்க”த்தால் வசமாக சிக்கிய போலீஸ் ஆபீசர்ஸ்.. கிடுக்குப் பிடி விசாரணையில் நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

Gem Veeramani Case- Police Officers

வைஃபை ஆன் செய்ததும், “தங்கமே தங்கமே எம்பட தங்கமே”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ”தங்க”மான செய்தியா?

ஆமாங்க ப்ரோ.. தங்கம் பற்றின நியூஸ்தான் ப்ரோ.. ஜெம் வீரமணி வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகளான முன்னாள் கமிஷனர் அருண், சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த என்.கண்ணன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ராதிகா.. இவங்க 3 பேரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு பல மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தி இருக்கு..

ADVERTISEMENT

இந்த விசாரணை தொடர்பாக நாம் விசாரித்த போது, ”ஜெம் வீரமணி தனக்கு எதிரான விவகாரத்துல போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கூடாது; பத்திரிகைகளில் செய்தி வெளியாகிடக் கூடாதுன்னு மூடி மறைக்க ஏகப்பட்ட பணம் செலவு செஞ்சாரு.. அதுக்காகவே சென்னை ஈசிஆர், ஊட்டி நிலத்தை எல்லாம் கூட வித்தாரு.. ஈசிஆரில் இருக்கிற நிலத்தை ரூ79 கோடிக்கு விற்பனை செஞ்ச ஜெம் வீரமணி, பிரகாஷ் என்பவர் மூலமாக போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவங்களுக்கு ‘செட்டில்’ செஞ்சிருக்கிறார். இந்த பிரகாஷ், ஜெம் வீரமணியின் மகளின் நண்பர்.. ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன்.

அதாவது, நிலத்தை விற்ற பணத்துல ஒரு பகுதியில சென்னையில இருக்கிற ஜிஆர்டி நகை கடையில 20 கிலோ தங்க நகைகள் வாங்கப்பட்டிருக்கு.. இதுக்கான அத்தனை ஆதாராங்களையும் சிறப்பு புலனாய்வு டீம் எடுத்தது.

ADVERTISEMENT

இந்த 20 கிலோ தங்க நகை வாங்கினது, அதுல அதிகாரிகள் ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி செட்டில் செஞ்சது எல்லாமே பிரகாஷ்தான்..

இந்த பிரகாஷின் செல்போன் எண்களை துருவி துருவி ஆராய்ந்த விசாரணை டீம், கால் ரெகார்ட்ஸை முழுமையாக கையில் வைத்துள்ளது. இதுல இந்த தங்கம் செட்டில்மெண்ட்டுக்கு முன்னாடி பேசுனது, பின்னாடி பேசுனது எல்லாம் வசமாக சிக்கி இருக்கு.

ADVERTISEMENT

சோ தங்கம் வாங்குனதுக்கும் ஆதாரம் இருக்கு.. தங்கத்தை கொடுத்ததுக்கும் ஆதாரம் இருக்குது.. இப்படி வலுவான ஆதாரங்களை வெச்சுகிட்டுதான் போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரணைக்கு சம்மன் அனுப்பி வரவழைச்சது புலனாய்வு டீம்.

இந்த விசாரணை ரெண்டரை மணிநேரத்துக்கும் மேல நடந்திருக்கு.. ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. கால் ரெக்கார்ட்ஸை வெச்சுகிட்டேயும் விசாரணை நடந்துச்சு. இந்த விசாரணையில சொல்லப்பட்ட அத்தனை பதில்களையும் ஒன்னுவிடாமல் ரெக்கார்டு செஞ்சது புலனாய்வு டீம்.

இப்ப பிரகாஷ், வெளிநாட்டுல இருக்கிறார்.. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கு.. பிரகாஷ் அக்கவுண்ட்ல இப்பவும் ரூ.20 கோடி இருக்குது.. இந்த அக்கவுண்ட்டை முடக்கி வைக்கிறதுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ.

அப்ப போலீஸ் உயர் அதிகாரிகள் மீது அடுத்து ஆக்‌ஷன்ஸ் இருக்குமாங்க ப்ரோ..

அப்படிதான் நாம நினைக்கிறோம்.. ஆனால் “சார் நீங்க முன்ஜாமீன் வாங்கி வெச்சுக்கோங்க..”ன்னு சொல்ல வேண்டியவங்க சொல்லிட்டதாலே இப்ப போலீஸ் அதிகாரிகள், சட்ட ஆலோசனைகளில் ரொம்ப தீவிரமா இருக்காங்களாம் ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share