‘உச்ச நீதிமன்றத்திற்கு நெருக்கடி தருவதா?’ திமுக – விசிக -சிபிஎம் காரசார விவாதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க முயற்சித்திருப்பது தவறான வழிமுறையாகும் என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

SIR விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் தலை​மை​யில் இண்டியா கூட்டணித் தலை​வர்​கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​திருந்​தனர். ஆனால், உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த சந்​திப்பு கோரிக்​கையை நிராகரித்துள்ளார்.

ADVERTISEMENT

திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது எக்ஸ் பதிவில், உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதிய போதிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க முயற்சித்திருப்பது தவறான வழிமுறையாகும்; மேலும் இது நீதித்துறையின் சுதந்திரம் என்ற அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது.

வழக்கு விசாரணைக்கு முன்பாக, வழக்கை விசாரிக்கும் நீதிபதியைச் சந்தித்து தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற எந்தவொரு litigants (வழக்காடியும்) செல்வாக்கு செலுத்த முடியாது. அரசியல்வாதிகளுக்கு மட்டும் சட்டம் வேறுபட்டிருக்க முடியாது. நீதி பரிபாலனத்திற்கு நடுநிலையும் பற்றின்மையும் அவசியமாகும்.

ADVERTISEMENT

அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவது எதிர்க்கட்சிகளின் உரிமையாகும், ஆனால் நீதித்துறையை அவர்கள் அரசியல் களத்திற்குள் இழுக்கக்கூடாது. எந்தத் தரப்பிலிருந்தும் அழுத்தம், அணுகுமுறை அல்லது செல்வாக்கு இல்லாமல், உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கில் வெளிநபர்களின் அழுத்தங்களைப் பிரயோகித்து நீதிமன்றத்தை அணுகுவது அல்லது மிரட்டுவது என்பது நீதி பரிபாலனத்தில் தலையிடுவதாகும்.

பொதுமக்களுக்கு நீதித்துறையே கடைசி அரரணாகும். நீதிமன்றத்தின் மீது கையை வைக்காதீர்கள். உங்கள் கவனத்தை உங்கள் அரசியல் எதிரிகள் மீது திருப்புங்கள்!” என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து விசிக எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் பதிவில், “”சுயேச்சையான தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் நீதித்துறைக்கு உங்கள் வாதம் பொருந்தும் வில்சன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், “நீங்கள் சொல்லும் எல்லா நியாயங்களும் முக்கியமானவை; ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

ஆனால்… நீதித்துறை எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவது, அழுத்தம் தருவதாகாது.

இந்தப் பேரணியின் முழக்கம், சுயேட்சையான அமைப்புக்கு எதிரான குரல் அல்ல; நீதியின் குரலை வலுப்படுத்தும் எதிரொலி.

நீதிமன்றக் கட்டிடம் என்பதாலேயே தூசு படியாமல் இருக்காது.

தூசி அகற்றித் தூய்மைப்படுத்துதல் என்பது உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் செய்யப்பட வேண்டிய ஒரே வேளையின் இரு தரப்பு; அசுத்தத்திற்கு எதிரான ஒரே தரப்பு.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share