விஜய் அரசு ”இதை” செய்யனும்.. ‘கறாராக’ சொன்ன கனிமொழி!

Published On:

| By Mathi

Kanimozhi MP DMK

மத்திய பாஜக அரசின் மொழித் திணிப்பை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு (Vijay Govt) கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. (Kanimozhi) வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. இன்று மே 17-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் நாங்க ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். புதிதாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசாங்கமும் இதை நிச்சயமாக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, எதிர்க்க வேண்டும். நிச்சயமாக எந்தவித மொழித் திணிப்பையும் தமிழ்நாட்டிலே ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share