59 ஆண்டு கால காங்கிரஸின் தாகம் தீர்க்கும் விஜய்.. அமைச்சரவையில் 2 பேருக்கு வாய்ப்பு!

Published On:

| By Mathi

Vijay Congress Cabinet

தமிழக முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் (Congress) கட்சியின் 2 பேர் இடம் பெற உள்ளனர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளதாவது: 2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.

ADVERTISEMENT

ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய், தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.

தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில்
இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ADVERTISEMENT

36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு. புதிய நம்பிக்கை. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share