“குதிரை பேர” விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) மீது சிபிஐ (CBI) வழக்கு பாயும் என அதிமுக (AIADMK) பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால், அதிமுக கொறடா உத்தரவுப்படி, விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதிமுக கொறடா உத்தரவை மீறி அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கட்சி தலைமை நியமித்த கொறடா உத்தரவு செல்லுமா? அதிமுக சட்டசபை அதிருப்தி குழு நியமித்த கொறடா உத்தரவு செல்லுமா? என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவும் அதன் அதிருப்தி குழுவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மாறி மாறி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி உள்ளன.

இந்நிலையில் அதிமுகவின் வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் விஜய்
மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிமுகவின் இன்பதுரை எம்.பி. எச்சரித்துள்ளார்..
