தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. Vijay advice social media
இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தவெக தலைவர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்பில் இருப்பதால் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் விஜய் ரெக்கார்ட் செய்து அனுப்பிய வீடியோ கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், விஜய் பேசும்போது, “நம்முடைய சோஷியல் மீடியா படை, இந்தியாவிலேயே மிகப்பெரிய படை. இதை நாம் சொல்வதை விட மற்றவர்களே பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.

இனிமேல் நீங்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. நீங்கள் அனைவரும் கட்சியின் Virtual Warriors. அப்படித் தான் உங்கள் அனைவரையும் நான் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தவெகவின் ஐடி விங் ரொம்ப ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும். விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Vijay advice social media
