நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்

Published On:

| By Selvam

துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவுடன் இன்று (செப்டம்பர் 18)பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

2012-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இயக்குனர்  விக்னேஷ் சிவன்.

ADVERTISEMENT

போடா போடி படம் அவருக்கு கமர்ஷியலாக வெற்றியைக் கொடுக்கவில்லை. பின்னர் 2015-ஆம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன் தாரா நடித்த நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும்  வெற்றியைப் பெற்றது.

vignesh shivan celebrate his birthday with nayanthara

இந்தப் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை விக்னேஷ் சிவன் பெற்றார். நானும் ரவுடி தான் திரைப்படத்திலிருந்து தான், இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா காதல் மலர்ந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவை திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்த கையோடு, தாய்லாந்துக்கு இந்த ஜோடிகள் ஹனிமூன் சென்றனர். பின்னர், இந்த ஜோடிகள் பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றனர்.

அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

vignesh shivan celebrate his birthday with nayanthara

இந்தநிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 18) துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு தனது மனைவி நயன்தாராவுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை இயக்குனர்  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள்மற்றும் திரைப்பிரபலங்கள்  இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share