டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு குறி வைத்த விஜய்! களமிறங்கும் விஜிலென்ஸ் ‘ரெய்டு டீம்’… டென்ஷனில் 2 மாஜி அமைச்சர்கள்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “என் நண்பன் போட்ட சோறு…நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

வணக்கம் ப்ரோ.. ஏகப்பட்ட ”நண்பாஸ்” அணிகள் இருக்கு.. நீங்க எந்த டீமை பத்தி சொல்றீங்க ப்ரோ..

ADVERTISEMENT

”நண்பாஸ்” அணி இப்ப வந்தது.. நாம சொல்ல போறது திமுக கவர்மெண்ட் ”நண்பர்கள்” டீம் பத்தினது.. ஏன் சுத்தி வளைச்சுகிட்டு.. விளக்கமாகவே சொல்லிடுறேன் ப்ரோ.

சட்டசபை கூட்டத் தொடர் முடிஞ்சதும் மாஜி திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஆக்‌ஷன் ஸ்பீடா இருக்கும்னு நாம ஏற்கனவே பேசி இருந்தோம். இப்ப அதுதான் நடக்க போகுதுங்க ப்ரோ..

ADVERTISEMENT

திமுக ஆட்சியில தனியார் பள்ளிகளிடம் ரூ100 கோடி வசூலிச்சார்னு அரசகுமாரை கைது செஞ்சாங்க இல்லையா? இந்த கேஸை பத்திதான் ரெண்டு நாளா பெருசா பேசுறாங்க.. அரசகுமார் மீது 177 புகார்கள் வந்துருக்கு.. இதுல சம்பந்தப்பட்ட முத்துக்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்னு ஒரே பரபரப்பா இருக்கிற நேரத்துல மாஜி பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுல லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடக்கப் போகுதுன்னும் தகவல் பரவுது..

அதே மாதிரி மாஜி பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போகப் போறாங்கன்னு தகவல்கள் தீயா பரவிகிட்டு இருக்குது.

ADVERTISEMENT

இதை பத்தி கோட்டை வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “நீங்க சொல்ற மாதிரி தகவல்கள் பரவிகிட்டுதான் இருக்குது.. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்தானே.. சட்டசபையில செப்டம்பர் 3-ந் தேதி காவல்துறை மானிய துறை கோரிக்கை மீது உதயநிதி ஸ்டாலின் பேசும் போது எழுந்த சிஎம் விஜய், ”எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது”ன்னு சொல்லிட்டு போனார்.

அதுக்கு உதயநிதி, “சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும்”ன்னு பதில் சொன்னார்.

அப்படி சட்டசபையில இருந்து சிஎம் விஜய் எழுந்து வெளியே வந்த அன்னைக்கு மாலையில், தலைமை செயலாளர், விஜிலன்ஸ் அதிகாரிகள், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்ன்னு அதிகாரிகளை அழைச்சு ஆலோசனை நடத்தினாரு.. அப்ப, “திங்கள்கிழமை சட்டசபையில பேசுறப்ப ஆணித்தரமான பேசனும்.. திமுக பதற்றத்துல இருக்கனும்.. அதுக்கு தகுந்த மாதிரி ‘ரெய்டு’ ஆபரேஷனை தொடங்கிடுங்க”ன்னு விஜய் சொன்னார்.

இதுக்கு பதில் சொன்ன அதிகாரிகள், “அன்பில் மகேஷ், மூர்த்தி, கே.என்.நேரு வழக்குகள்தான் ரொம்ப முக்கியம்… இதுல அன்பில் மகேஷ், மூர்த்தி கேஸ்களில் இன்னும் நமக்கு டாக்குமெண்ட்ஸ் வேணும்.. கூடுதலா சாட்சிகள் வேணும்..”ன்னு சொன்னாங்க..

அப்ப உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், “அப்படி பார்த்தா கே.என்.நேருவுக்கு எதிரா அமலாக்கத்துறை ரிப்போர்ட்ஸ் இருக்கு.. அதை பேஸ் பண்ணி ரெய்டு போகலாம்.. நாமும் அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி ரெய்டு செஞ்சோம்னு பதில் சொல்லிடலாம்”ன்னு சொன்னார்..

இதை விஜய்யும் ஏத்துகிட்டார்.. இதுக்கு அப்புறம்தான் விஜிலென்ஸ் டீம், கே.என்.நேரு மற்றும் அவரோட தொடர்புடையவங்க வீட்டுக்குள்ள போனது… சட்டசபையில விஜய்யும் அமலாக்கத்துறை ரிப்போர்ட்டை கோட் பண்ணி பேசுனார்”ன்னு சொன்னாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. இப்ப திடீர்னு அன்பில் மகேஷ், மூர்த்தி வீடுகளில் ரெய்டு வரப் போகுதுன்னு ஏன் பேச்சு வருது?

சொல்றேன் ப்ரோ.. அன்னைக்கு பேசுனது அன்னையோட முடியலையே.. அன்பில் மகேஷ், மூர்த்தி ரெண்டு பேர் வீட்டுக்கும் ரெய்டு போகனும்னு ஆர்டர் போட்டாச்சு.. இந்த ஆபரேஷனோட டார்கெட் அவங்க ரெண்டு பேரும் இல்லை.. அவங்க மூலமா ‘உதயநிதி’தான் டார்கெட்ன்னு சொல்றாங்க..

இதை பத்தியும் கோட்டை வட்டாரங்களில் பேசுனப்ப, “போன கவர்மெண்ட்ல உதயநிதி கூடவே இருந்தது அன்பில் மகேஷ்தான்.. உதயநிதிக்கு ரொம்ப நெருக்கமானவர்.. நெருங்கிய நண்பர்.. அன்பில் மகேஷ்.

அதே மாதிரி மாஜி மந்திரி மூர்த்தி சக திமுக லீடர்ஸ்கிட்ட, “நானா செஞ்சேன்.. உதயநிதி செக்ரெட்டரி ‘செந்தில்’ சொல்லிதானே எல்லாம் செஞ்சேன்.. அவங்க சொன்னாங்க.. நான் செஞ்சு கொடுத்தேன்”ன்னு சொல்லிகிட்டு இருக்கிறாராம்..

அதனாலதான் அன்பில் மகேஷ், மூர்த்தி வீடுகளுக்கு விஜிலினெஸ் போனா, அவங்களுக்கு எதிரான ஆதாரம் கிடைக்குதோ இல்லையோ “உதயநிதி” தொடர்பான ஆதாரங்கள் சிக்கும்னு நினைக்கிறாங்க.. உதயநிதிக்கு குடைச்சல் கொடுக்கனும்னு முடிவு பண்ணிதான் இந்த ரெய்டு நடக்க போகுது”ன்னு நம்மிடம் சொன்னாங்க ப்ரோ.

இன்னொரு பக்கம் ரெய்டு வரப் போகுதுன்னு தகவல் பரவிகிட்டு இருக்கும் போதே அன்பில் மகேஷும் மூர்த்தியும் உஷாராகிட்டாங்க.. எந்த நேரத்திலும் இவங்க ரெண்டு பேரு வீட்டுக்குள்ளும் விஜிலென்ஸ் டீம் உள்ளே போகும் அப்படிங்கிறதுதான் இப்போதைய நிலவரம் ப்ரோன்னு டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share