டிஜிட்டல் திண்ணை: விஜய் கூட்டத்தில் திருமாவளவனுக்கு ‘ஷாக்’- பிடிவாதம் பிடித்த ‘தலை’கள்!

Published On:

| By Minnambalam Desk

Vijay- TVK Alliance Meeting

Vijay Lead TVK Alliance Meet: வைஃபை ஆன் செய்ததும், “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. இது ‘கூட்டணி’க்காக OG பாட்டு இல்லையா?

ஆமாங்க ப்ரோ.. நாம இப்ப பேசப் போறதும் கூட, தமிழகத்தில் உதயமாகிவிட்ட புதிய கூட்டணியை பத்திதானே..

ADVERTISEMENT

தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துல கூட்டணிக்கு பெயர் வைக்கப் போறாங்கன்னு நாம சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி சிஎம் விஜய் தலைமையில நடந்த தவெக கூட்டணி கூட்டத்துல, ”மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி”ன்னு பேரு வெச்சிருக்காங்க.. ப்ரோ.

தவெக கூட்டணி கூட்டத்துக்கு வாங்கன்னு சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட ‘தோழமை’ கட்சிகளோட தலைவர்களை எல்லாம் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் டீம் நேரில போய் சந்திச்சு அழைப்பு விடுத்துச்சு.. ஆனா சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ரெண்டுமே ”நாங்க கூட்டணியிலேயே இல்லையே.. எப்படி கூட்டணி கூட்டத்துக்கு போவோம்?”ன்னு அறிவிச்சுட்டாங்க..

ADVERTISEMENT

இதுக்கு பிறகுதான் சிஎம் விஜய் தலைமையில பனையூர் ஆபீசில் நடந்த தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்துல காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், விசிக தொல். திருமாவளவன், மதிமுக வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன் உள்ளிட்டவங்களும் அவங்க கட்சி நிர்வாகிகளும் கலந்துகிட்டாங்க..

இந்த கூட்டத்துல கலந்துகிட்டவங்ககிட்ட நாம பேசுனப்ப, “ தவெக கூட்டணி கட்சிகளோட 2-வது கூட்டம்.. இதுல, “கூட்டணிக்கு பெயர் வைக்கிறது, கூட்டணி தலைவர், கூட்டணி ஒருங்கிணைப்பாளர், குறைந்தபட்ச செயல்திட்டம், கூட்டணி ஒருங்கிணைப்புக்கான குழு, மாவட்டந்தோறும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கிறதுன்னு பல விஷயங்கள் பேசப்படும் அப்படிங்கிற எதிர்பார்ப்போட கலந்துகிட்டோம்..

ADVERTISEMENT

கூட்டணிக்கான பேரு வைக்கிறது பத்தி பேச்சு வந்தது.. அப்ப விஜய், “சமூக நீதி வெற்றிக் கூட்டணி”ன்னு வைக்கலாம்னு சொன்னார்.

இதற்கு திருமாவளவன், “இல்லைங்க… மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி”ன்னு பேரு வைக்கலாம்.. ”மதச்சார்பற்ற” அப்படிங்கிற சொல் இருந்தாதான் நாம்தான் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிற அணின்னு இருப்போம்.. சிறுபான்மை மக்கள்கிட்ட நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால ‘மதச்சார்பற்ற’ன்னு சேர்த்து வைக்கனும்னு சொன்னார்.

ஆனா முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், “அப்படி எல்லாம் இல்லைங்க.. யாரு இங்க மதச்சார்பு இல்லாம இருக்கிறது? அதனால “மதச்சார்பற்ற” அப்படிங்கிற வார்த்தையே வேண்டாம்”ன்னு எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்பு தெரிவிச்சார்.. திருமாவளவன் உள்ளிட்டவங்க, ”என்ன காதர் மொகிதீனே இப்படி பேசுறாரு”ன்னு ஷாக் ஆயிட்டாங்க..

அத்துடன், விஜய்யை ஆதரிக்கிறது என்பது, “எங்களோட சமுதாயம் (முஸ்லிம்கள்) இட்ட கட்டளை..”ன்னு பேசிவிட்டு சமூக நீதி வெற்றி கூட்டணி”ன்னு விஜய் பேரு வெச்சதுதான் ரொம்ப சரி”ன்னு சொல்லி முடிச்சார்..

இந்த கூட்டத்துல மாணிக்கம் தாகூர் பேசும் போது, அவரும் திருமாவளவன் கருத்துக்கு எதிராக, “மதச்சார்பற்ற” அப்படிங்கிற வார்த்தையே வேண்டாம்.. விஜய் சொன்னபடி, “சமூக நீதி வெற்றிக் கூட்டணி”ன்னு இருக்கட்டும் அப்படின்னு பேச திருமாவளவன், விசிக நிர்வாகிகள் அதிர்ச்சியாகிட்டாங்க..

வைகோ பேசும் போது, “இது ஒரு மகத்தான கூட்டணி.. எல்லா காலத்திலும் நீங்கள்தான் இருப்பீர்கள்” என தொடங்கி ”இந்த அரசாங்கத்தை நாம் விமர்சிக்கக் கூடாது. முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ, அரசாங்கத்தையோ விமர்சனம் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது இந்தக் கூட்டணிக்கு சரியாக இருக்காது. இந்தக் கூட்டணியின் மீதும், தலைவர் விஜய்யின் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது”ன்னு சொன்னார்.

ரொம்பவே அதிருப்தியில இருந்த திருமாவளவன் மறுபடியும், “மதச்சார்பற்ற” அப்படிங்கிற சொல் இருந்தாதான் நம்ம கூட்டணிக்கு வலிமையாக இருக்கும் அப்படின்னு அழுத்தமாக சொன்னார்.

காங்கிரஸ், முஸ்லிம் லீக் எதிர்த்தும் திருமாவளவன் இவ்வளவு உறுதியா இருந்ததால விஜய் வேற வழியே இல்லாம, “சரிங்க.. நீங்க சொன்னபடியே வைத்து கொள்வோம்..”ன்னு கடைசியா “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி”ன்னு பேரு வைக்க ஒத்துகிட்டார்.

இதுக்கு அப்புறமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டணிக்குள் வராதது பத்தி பேச்சு வந்தது.. ”கம்யூனிஸ்ட் கட்சிகளும் நம்ம கூட்டணியில் இடம் பெறனும்..அது நமக்கு வலிமையா இருக்கும்”ன்னு விஜய் பேசுனார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலைப் பத்தி பேசுறப்ப, “லண்டன் போறதுக்கு முன்னாடியே வேட்பாளர்களை அறிவிக்கிறோம்”ன்னு விஜய் சொன்னார்.. அதன்படியே வேட்பாளர்களையும் அறிவிச்சுட்டு லண்டன் போயிட்டார்.

இந்த கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல் திட்டம் பத்தி பேசுறப்ப, ஆள் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்ல அது ”முடிகிற காரியம் மாதிரி” தெரியலை.. அதனால அதை அப்படியே விட்டுட்டாங்க.. அதே மாதிரி ஒருங்கிணைப்பாளர் யாருங்கிறதை பத்தியோ கூட்டணிக்கான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கிறதை பத்தியோ, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்கிறதை பத்தியோ இந்த கூட்டத்துல எந்த முடிவுமே எடுக்கலை..

இந்த கூட்டணிக்கு தலைவர் விஜய்.. கூட்டணி பெயர் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இந்த ரெண்டுதான் பைனலானது..”ன்னு சொன்னாங்க ப்ரோ.

இந்த கூட்டத்துக்கு பிறகு விசிக சிந்தனை செல்வன், “சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என்று முன்மொழியப்பட்ட பெயர், நமது தலைவர் எழுச்சித்தமிழரின் அறிவார்ந்த ஆளுமையால் ‘ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என திருத்தியமைக்கப்பட்டுள்ளது”என்னு ட்வீட் போட்டிருந்ததே இதை எல்லாம் வெச்சுதான் ப்ரோன்னு டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share