இரு தொகுதி இடைத்தேர்தல் : தவெகவுக்கு போட்டியாக பெண் வேட்பாளர்களை களமிறக்கிய எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகள் இடைத்தேர்தல்களை சந்திக்க இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர்களை இன்று (,செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தேர்தல் வழக்கு காரணமாக 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து முதல் கட்சியாக திமுக வேட்பாளர்களை அறிவித்தது. அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் களம் காண்கின்றனர்.

ADVERTISEMENT

அடுத்ததாக தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்களை அறிவித்தது.

அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுகவும் இன்று மாலை வேட்பாளர்களை அறிவித்துள்ளது..

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டு பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்ட நிலையில் அதிமுகவும் இரண்டு பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளது.

அதேபோன்று தாராபுரம் தொகுதியில் திமுகவும் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதனால் அந்த தொகுதியில் மூன்று கட்சி சார்பிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share