தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, தனது சொந்தத் தொகுதியான ராஜபாளையத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. இந்த அமைச்சரவையில், ராஜபாளையம் தொகுதியில் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ” உங்களால் தான் நான் இப்போது அமைச்சராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது, அதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கிருந்த பொதுமக்கள் தொடர் மின்வெட்டு மற்றும் டாஸ்மாக் பிரச்சனைகள் குறித்துப் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் தரப்பில், “இரவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது; இரவு 12 மணி வரை இந்தப் பிரச்சனை நீடிக்கிறது. நேற்றும் இதே நேரத்தில் இந்த இடத்தில் கரண்ட் போனது. ஆனால், இன்று அமைச்சர் வருகிறார் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் வைத்திருக்கிறீர்கள். இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் கேட்டால் மேல் இடத்து உத்தஅமைச்சர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியில் பொதுமக்கள் வாக்குவாதம்
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, தனது சொந்தத் தொகுதியான ராஜபாளையத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. இந்த அமைச்சரவையில், ராஜபாளையம் தொகுதியில் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ” உங்களால் தான் நான் இப்போது அமைச்சராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது, அதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கிருந்த பொதுமக்கள் தொடர் மின்வெட்டு மற்றும் டாஸ்மாக் பிரச்சனைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பொதுமக்கள் தரப்பில், “இரவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது; இரவு 12 மணி வரை இந்தப் பிரச்சனை நீடிக்கிறது. நேற்றும் இதே நேரத்தில் இந்த இடத்தில் கரண்ட் போனது. ஆனால், இன்று அமைச்சர் வருகிறார் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் வைத்திருக்கிறீர்கள். இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் கேட்டால் மேல் இடத்து உத்தரவு எனக் கூறுகிறார்கள். நாங்கள் யாரிடம் சென்று கேட்பது? மேலும், புகார் அளிக்கச் சென்றால் கட்சி நிர்வாகிகள் எங்களைத் தள்ளிவிடுகிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பொதுமக்களின் இந்தத் திடீர் எதிர்ப்பால் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.