”கதை என்னனு எனக்கே தெரியாது” -வெந்து தணிந்தது காடு இயக்குனர் கௌதம்

Published On:

| By Aara

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் செப்டம்பர் 2 அன்று ஐசரி வேலன் அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, ”முதலில் இந்தப் படத்திற்கு ‘நதிகளில் நீராடும் சூரியன் என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன்.

ADVERTISEMENT

திடீரென ஜெயமோகன் ஒரு புது லைன் சொன்னார். ஆனால், இது புது ஹீரோ பண்ணக் கூடிய கதை என்றார். ஆனால் நான், சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார் என்று அந்தக் கதையை படமாக்க ஆரம்பித்தேன்.

சிம்புவிடம் கதை சொன்னவுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐசரி சார் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.

ADVERTISEMENT

இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கே இந்தப் படம் ஒரு  புது விசயமாக இருந்தது.

vendhu thanindhadhu kadu

’ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளியே வந்து ஜெயித்தால்தான் இயக்குநர். இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்’ என்று ஜெயமோகன் சார் சொன்னார்.

ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். ஏனென்றால் இந்தப் படத்தின் கதை என்னவென்று எனக்குத் தெரியாது.

ஜெயமோகன் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல்  ஒரு காதலை வைத்துள்ளேன்” என்று பேசிய கௌதம் மேனன் அடுத்து ரகுமானை பற்றி கூறினார்.

“ஏஆர்.ரஹ்மானுக்கும் எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை கேட்டு, டியூன்களைப் போட்டுக் காட்டி விவாதிப்பார்.

அவருடன் வேலை செய்யும் அனுபவமே வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக் கதைக்கு 3 பாடல்களை தந்திருந்தார்.

பின்னர் இந்தக் கதையை சொன்னபோது புதிய பாடல்களை தந்தார். இவர்களால்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இராமானுஜம்

கொல் அல்லது கொல்லப்படு: வெந்து தணிந்தது காடு டிரெய்லர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share