“வரலாறு உங்களை மன்னிக்காது அண்ணே..” அமைச்சர் வன்னி அரசு சொல்லும் பொய்- குமுறும் மாணவர்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று மலேசியாவில் முனைவர் (PhD) பட்டம் பயிலும் தமிழக மாணவர் பாரதி தாசன் அரசு தரப்பில் வழங்கப்படும் நிதி உதவியை பெறுவதில் சில சிக்கல்கள் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாணவரின் குற்றச்சாட்டுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகையானது எவ்வித தாமதமோ அல்லது தடங்கலோ இன்றி சீராக வழங்கப்பட்டு வருகிறது. உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல், அரசியலில் உள்நோக்கத்தோடு இத்தகைய அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மலேசியா பல்கலைகழகத்தில் Tissue Engineering and Regenerative Medicine படிப்பில் உயர்கல்வி பயில மேற்படி மாணவர் பாரதிதாசன் என்பவருக்கு மூன்றாண்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் 09.01.2025 அன்று பரிந்துரை கடிதம் eng) (Sponsorship lettor) அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் (Living & other Expenses) சேர்த்து அதிகபட்சமாக ரூ.36.00 லட்சம் வழங்கப்படுகிறது.

National University of Malasiya-வில் மாணவர் பாரதிதாசன் பயிலும், Ph.D.. படிப்புக்கு ஆண்டொன்றுக்கு கல்விக் கட்டணமாக ரூ.5.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர் 2025-2026-ஆம் ஆண்டு தனது முதலாமாண்டு Ph.D. படிப்புக்கு கல்விக்கட்டணம் போக மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக (Living & other Expenses) கோரியிருந்த நிலையில், அரசால் மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தை வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை பெற்ற பின் உரிய செலவினங்களுக்கான ஆவணங்கனை உடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவரால் 10 மாதங்கள் கடந்த பின்னரும். அதற்கான ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமலும். 2 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை ரூ.36.00 இலட்சத்தை கோரிவருகிறார்.

ADVERTISEMENT

இருந்த போதிலும், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாணவரின் 2-ஆம் ஆண்டு PhD. கல்விக்கு அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 இலட்சம் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 இலட்சம். ஆகமொத்தம் ரூ.12.00 இலட்சம் (RM 23460 + RM 27600 RM 51060) அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.48,22,097/-ஐ மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாணவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குறிய சரியான பயனீட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகை பெற சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் எந்த விதமான தாமதமோ, தடங்கலோ இல்லை.

மாணவரின் தவறான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு (2026-2027) 362 மாணாக்கர்களுக்கு வழங்கி இருப்பது பெரும் சாதனையாகும்.” என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடரந்து வரலாறு உங்களை மன்னிகாது அண்ணே என்று மாணவர் பாரதி தாசன் மேலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” நான் மலேசியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் PhD, டிஷு இன்ஜினியரிங் அண்ட் ரீஜெனரேட்டிவ் மெடிசின் படிக்கிறேன். எனக்கு 2ம் ஆண்டுக்கு உண்டான ரிசர்ச்க்கு எந்த ஹெல்ப்பும் வரவில்லை என நான் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன்.

அது சமூக வலைதளங்கள்ல மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக நீதி அண்ணன் வன்னி அரசு, ‘இல்ல அப்படி இல்ல, நாங்க வந்து இவ்ளோ பண்ணிருக்கோம்’ என்று ஒரு ஸ்டேட்மெண்ட்டாக வெளியிட்டுள்ளார். நான் அதைப் பாத்தேன்.

அந்த ஸ்டேட்மெண்ட் எல்லாம் வந்து 2025. அதில் கல்வி ஆண்டை பார்த்தீர்களா?, நான் 2025ல்தான் மலேசியா வந்தேன்.

2025 விஷயத்தை அவர் எடுத்து வைத்து நான் இவ்வளவு குடுத்துருக்கேன், என்று பெருமையா பேசுகிறார்.

மேலும் டியூஷன் ஃபீஸும், லிவிங் எக்ஸ்பென்ஸும் கொடுத்தாங்க. உண்மைதான், 12 லட்சம் வரைக்கும் கொடுத்துருக்காங்க. நான் கேக்குறது ரிசர்ச்க்கு உண்டான எக்யூப்மென்ட்ஸ், மெட்டீரியல்ஸ் , புக்ஸ் வாங்குறதுக்கு பணம் நான் விண்ணப்பித்திருக்கிறேன். அதற்கு இப்போது வரை எந்த ரெஸ்பான்ஸும் வரல.

இந்த டேட்டாவை நான் உங்ககிட்ட சொல்ல நினைக்கிறேன். (ஒரு ஃபைலை காட்டுகிறார்)

எங்க புரொபசர் வந்து செகண்ட் இயர்க்கு உண்டான எவ்வளவு ரிசர்ச்க்கு , மெட்டீரியல்ஸ் எவ்வளவு பணம் வேண்டும் என 2026-ல மார்ச் 24-ஆம் தேதி மெயில் செய்தார்கள். ஏப்ரல் 21 வந்து ரசீதை அனுப்பி விட்டேன். ரிசர்ச் பீஸ் எல்லாத்தையும் நான் அனுப்பி பண்ணிட்டேன். ஏப்ரல் 24ல் ரெஸ்பான்ஸ் வரல. நான் ஃபாலோ அப் செய்தேன். ஏப்ரல் 13 வந்து கிளாரிஃபிகேஷன் கொடுத்தேன். ஜூன் 8 வந்து ஃபாலோ அப் மெயில் போட்டேன். ஜூன் 29 கொட்டேஷன் அனுப்புனேன். அதுக்கப்புறம் எந்த ரெஸ்பான்ஸும் வரவில்லை. தொடர்ந்து மெயில் அனுப்புனேன், எந்த ஒரு ரெஸ்பான்ஸும் வரவில்லை.

அதுக்கப்புறம் அண்ணன் வன்னி அரசுவை வந்து என்னுடைய வெல்விஷர்ஸ் மூலியமா முயற்சி பண்ணிப் பாத்தேன். ஃபர்ஸ்ட் அவருக்கு வந்து 20-ஆம் தேதி, ஏழாவது மாசம், 2026 முதல் மனுவை அவருக்கு அனுப்புனேன். அவசர மனுவா 11/08/2026-க்கு இரண்டாவது மெயில் அனுப்புனேன்.

என்னுடைய வெல்விஷர்ஸ் அண்ணன்கள் தொடர்ந்து வன்னி அரசு அண்ணனை பாக்க முயற்சி செய்தார்கள். அவரு, நான் பேசுறேன், நான் பண்றேன்னு டைரக்டருக்கு பேசுகிறார். ஆனா இந்த பில்லு விஷயத்த அவரு இன்ன வரைக்கும் பேசவே இல்லை.

இப்போ இது சோஷியல் மீடியால வைரல் ஆன உடனே, அந்த ஸ்டுடென்ட் வந்து பில்லு அனுப்பவில்லை அப்படின்னு சொல்கிறார். பாதிக்கப்பட்டு எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லி, நான் என்னுடைய மனக்குமுறலையோ, மனவேதனையோ நான் ஒரு சோஷியல் மீடியால வந்து சொன்னால், ‘நீ வந்து பில்லு சப்மிட் பண்ணல’என்கிறார். அதாவது, பாதிக்கப்பட்டவன் மேலேயே வந்து ஒரு நெரெட்டிவ்-வை செட் பண்ணி, இந்த ஸ்டுடென்ட்ஸ் இப்படித்தான் அப்படின்னு நீங்க நேரேடிவ் செட் பண்றீங்க. உங்களுக்கு மனசாட்சி இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல.

பாதிக்கப்பட்ட பையன் மேலேயே ஒரு நெரெட்டிவ்-வை செட் செய்து இவன் இப்படித்தான்னு நீங்க செட் பண்றீங்களே… இது ரொம்ப வருத்தமா இருக்குண்ணே. அண்ணே, நீங்க வந்து ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கீங்க. இத பண்ண உங்களுக்கு மனசாட்சி இல்லையாண்ணே? நீங்க இப்படி செய்தால் உங்க வரலாறு வந்து உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

நீங்க அட்லீஸ்ட் என்கிட்ட பேசியிருக்க வேண்டும் அண்ணே. தலித் ஸ்டூடென்ட், மலேசியாவுல படிச்சுட்டு இருக்காப்ல, என்ன பிரச்சனைன்னு சோஷியல் மீடியால ஒரு இம்பாக்ட் வந்துருக்கு, என்ன பிராப்ளம்னு இப்ப வரைக்கும் கேட்டீங்களா அண்ணே நீங்க? கேக்கல. நீங்க வந்து ஒரு அதிகாரப்பூர்வமாக ஒரு டாக்குமெண்ட்டை ரிலீஸ் பண்றீங்க.

இப்போ வரைக்கும் எனக்கு கவர்மெண்ட்ல இருந்து ரெஸ்பான்ஸ் வரவில்லை. நான் இதெல்லாம், இந்த டேட்டாவலாம் எடுத்து அரசுக்கு மெயில் செய்து விட்டேன். ஆனால் அரசு ரெஸ்பான்ஸ் பண்ணுவாங்களா இல்லையான்னு எனக்கு தெரியவில்லை.

தேங்க்யூ, இதான் உண்மை. நான் தொடர்ந்து ஃபாலோ அப் பண்றேன், மெயில் பண்றேன், ரெஸ்பான்ஸ் வரல. வன்னி அரசு அண்ணன் சொல்வது முற்றிலும் பொய். நான் பில் எல்லாம் ஏற்கனவே அனுப்பி விட்டேன். ஆனால் அவர் சொல்ற தகவல் முற்றிலும், முற்றிலும் பொய்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share