விஜய் ஆட்சியில் தமிழ்நாடு அரசு விழாவில் வந்தே மாதரத்துக்கு முதலிடம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஆட்சியில் இன்று (மே 10) நடந்த தமிழக அரசு விழாவில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியது.

விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இப்போதும் நீடிக்கிற சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் நேற்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை விஜய் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் இருந்த 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து விழா முடிவடைந்த போதும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இறுதியாக தேசியகீதம் பாடப்பட்டது.

தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல் முறையாக தமிழக வரலாற்றில் வந்தே மாதரம் பாடலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share