பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மாற்றம்!

Published On:

| By Mathi

Vanathi Srinivasan relieved from BJP's All-India responsibility

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக கடந்த ஜனவரியில் நிதின் நபின் பொறுப்பேற்றார். தற்போது பாஜகவின் அகில இந்திய நிர்வாகிகள் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வந்தார். தற்போது, வானதி சீனிவாசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தின் ரூப் குமாரி சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, ஆந்திராவின் புரந்தரேஸ்வரி உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராக பிஎல் சந்தோஷ் தொடருகிறார். பாஜகவின் புதிய பொதுச்செயலாளர்கள் 8 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ஒருவர்.

பாஜகவின் தேசிய செயலாளர்களாக 16 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன், தேசிய செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

பாஜகவின் பொருளாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share