இன்னைக்கு நம்ம நண்பர் ஒருத்தர பார்க்க போயிருந்தேன்.
டீக்கடையில நண்பருக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
அப்போ திடீர்னு பக்கத்துல ஒரு ஆள் வந்து, “ப்ரோ… சிஎஸ்கே மேட்சுக்கு டிக்கெட் வேணுமான்னு” கேட்டாப்ல…
“இல்ல ப்ரோ எனக்கு வேண்டாம். சிஎஸ்கே மேட்சுக்கு டிக்கெட்டே கிடைக்காதே… உங்கக்கிட்ட மட்டும் எப்படி டிக்கெட் கிடைச்சதுன்னு” கேட்டேன்.
“அட போங்க ப்ரோ… என்கிட்ட 16 டிக்கெட் இருக்கு. சிஎஸ்கே டீம் தொடர்ந்து தோக்குறதால இப்பல்லாம் யாரும் மேட்ச் பாக்கவே போறதில்லை. இது வேற தெரியாம நான் இவ்வளவு டிக்கெட்ட வாங்கிட்டேன். எப்படித்தான் இதை விக்கப்போறேனோன்னு” பொலம்பிட்டு போய்ட்டாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes

கடைநிலை ஊழியன்
பாஸ்.. ரொம்ப hot டா இருக்கு.. வாங்க cool லா ஒரு ஜூஸ் குடிப்போம்..
எவ்ளோ வெயில் அடிச்சாலும், cool லா எது குடிச்சாலும் சளி பிடிக்கும் டா எனக்கு..
tea வேணும் னா குடிப்போம் வா..

ச ப் பா ணி
சர்ப்ரைஸ்க்கும் ஷாக் க்கும்
நூலலளவு தான் வித்தியாசம்
மனைவி திடீர்னு ஊருக்கு போறேனு சொன்னா சர்ப்ரைஸ்
போய்ட்டுக்கு ஈவ்னிங் வந்திடுவேனு சொன்னால் ஷாக்

Sasikumar J
பொண்டாட்டி ‘நீங்க எது சொன்னாலும் சரிதான்’ அப்படின்னு சொன்னா ஒரு பெரிய பிரளயம் நடப்பதற்கான முன்னெச்சரிக்கை தான்…!

Baske₹
மார்ச் மாதம் HIKE காக உருவாக்கப்படும் HYPE நம்பி ஏப்ரல் எவ்வளவு சம்பளம் வரும் என்று கணக்கு போடாதவன் மனநிலை தான் ஜென் மனநிலை

Sasikumar J
உனக்கு குளிக்கும்போது சோப்பையே நழுவ விடாமா பிடிக்க தெரியாது, வந்த வாய்ப்பை மட்டும் அப்படியே நழுவ விடாமலா பிடிக்க போற…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
We are suffering from fever, kindly grant us one day leave from the match sir..
CSK & SRH டீம்னு சொல்றீங்க.. இன்னைக்கு மேட்ச்ல யாராவது ஒருத்தர் ஜெயிச்சே ஆகனும், அது உடம்புக்கு ஒத்துக்காதுன்னு வேற சொல்றீங்க, ரெண்டு பேரும் தாராளமா லீவு எடுத்துக்குங்க சார்..

ச ப் பா ணி
அண்ணே ஒரு ஐநூறு ரூபாய் ஜி பே பன்னுங்க..அர்ஜெண்ட்
போடா போடா
நானே 40ரூ தான் வச்சிருக்கேன்

லாக் ஆஃப்
