ஓசியில ஏசி காத்து… அப்டேட் குமாரு

Published On:

| By Minnambalam

இன்னைக்கு காலையில வேர்த்து விறுவிறுத்து ஆபிஸ் வந்தேன்.

அந்த டைமுக்கு எண்ட்ரி கொடுத்த நம்ம நண்பர் மட்டும் ரொம்ப பிரெஷ்ஷா இருந்தாப்ல.

ADVERTISEMENT

“வெயில் இப்படி கொளுத்துது… நீங்க மட்டும் இப்படி ஃபிரெஷ்ஷா இருக்கீங்கன்னு” கேட்டேன்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன். யாருக்கிட்டையும் சொல்லாதீங்கன்னு” சொன்னாப்ல.

ADVERTISEMENT

“சரி… சொல்லுங்க நண்பான்னு” சொன்னேன்.

“இல்ல… ஆபிஸ் வர்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நான் நடக்கனும். வர்ற வழியில மூணு ஏடிஎம் இருக்கு. ஒவ்வொரு ஏடிஎம்-லயும் ஐஞ்சு நிமிஷம் ஓசியில ஏசி காத்து வாங்கிட்டு வருவேன். வெயிலுக்கு கொஞ்சம் இதம்மா இருக்கும்ன்னு” சொன்னாப்ல.

ADVERTISEMENT

அட… இவ்வளவு நாளு நமக்கு இந்த ஐடியா வராம போச்சேன்னு நினைச்சுக்கிட்டு, “நாளையில இருந்து நானும் இதை ஃபாலோ பண்றேன்னு” அவர்க்கிட்ட சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes

ச ப் பா ணி

சூப்பர் மார்க்கெட்டுக்கு வீட்டுக்காரரை கூட்டிப் போவதே ட்ராலி தள்ளத்தான்.

கோழியின் கிறுக்கல்!!

ரெண்டு மூணு Season இருக்கிற webseriesலாம் பார்த்து முடிச்ச பிறகு,

நாலைந்து நாட்களுக்கு அவங்க எல்லாம் நம்ம கூடவே வாழ்கிற மாதிரி ஒரு feel வருது!!

Sasikumar J

டாஸ்மார்க், நகை கடை கிட்ட தட்ட ரெண்டுமே ஒண்ணுதான் எவ்வளவு விலை ஏறினாலும் அங்க போறவங்க போய் வாங்கிட்டு தான் இருக்காங்க…!

குருநாதா

ஏம்பா ஊரே IPL match பாத்துட்டுருக்கு
நீ மட்டும் football match பாத்துட்டு இருக்க

நான் CSK fan ங்க

balebalu

சென்னையில் ‘காற்று’ ன்னு ஒன்னு இருக்கா இல்லையா
காலையிலேயே இப்படி கொதிக்குது
இன்னும் அக்கினி நட்சத்திரம் கூட வரல்ல
அதுக்குள்ள 😫

குருநாதா


பூஜா போட்ட ஸ்டெப்புக்கு எவ்ளோ ரீல்ஸ்

ஒரு பயலாச்சும் சூர்யா இல்ல சநா ஸ்டெப்க்கு ரீல்ஸ் போட்டானுகளா?

ஆண்கள்னாலே இளிச்சாவாயன் தானே

balebalu

புது வகை ரூ.500 கள்ள நோட்டு சந்தையில் புழக்கம் :
மத்திய அரசு எச்சரிக்கை – செய்தி

யாரை தேடுற

Demonetisation செஞ்சு கள்ள நோட்டு எல்லாம் ஒழிச்சாச்சு ன்னு சொன்னவங்களை தான்

ArulrajArun

சொன்னா நம்ம மாட்டீங்க ன்னு சொல்லுற விஷயம் எல்லாமே 99% நாம நம்பகத்தன்மை இழந்ததா தான் இருக்கும். update kumaru memes jokes

லாக் ஆஃப்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share