தெய்வம் தந்த வீடு… வீதி இருக்கு: அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

திருச்சில இன்னைக்கு பேசுன ஓபிஎஸ் ‘அடுத்த தடவையும் மோடியே பிரதமராக வேண்டும், இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம்’னு பேசிட்டு இருந்தாரு.

அந்த நேரம் பார்த்து பக்கத்து சீட்ல இருந்த சின்ராசு போனுல, ’தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு, இந்த ஊரென்ன சொந்த வீடென்ன..’னு ரிங்டோன் ஒலிக்குது

டைமிங்ல இந்த பாட்ட கேட்ட உடனே, ‘ஆகா இதுகளும் சதி பண்ணுதே’னு வடிவேலு மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சி..

ம்ம்ம்… ஒருவேள அப்படி ஆயிடுமோ…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Image

Kirachand

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பாஜக ஸ்பான்சர் செய்வதுபோல் உள்ளது! – அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர்.

தப்பா சொல்றீங்கண்ணே… மக்களவை தேர்தலுக்கு ராமரை அம்பாசிடரா வச்சிருக்காங்க…

Black Cat 2

“கேப்டன் மில்லர் பாக்கலாமா அயலான் பாக்கலாமா..”

Life: “திரும்பி என்னைய பாருடா..”
???????????? ™
ஜோசியர் ~ இந்த 2024 ல நீ நினைக்குறதுலாம் நடக்கும்
Me ~ 2024 காலண்டர் வாங்கனும்னு நெனச்சேன் அதுவே இன்னும் நடக்கலடா.

மெக்கானிக் மாணிக்கம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இல்லை.. இல்லை..” -எடப்பாடி பழனிசாமி உறுதி!

எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

அப்படித்தான் சொல்லச் சொன்னார்,  ’அந்த’ ஷா.

Kirachand

வரும் மக்களைவை தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம்! – ஓபிஎஸ்

தேர்தலில் தோற்றால்… இறைவன் தந்த சின்னத்தால்தான் தோற்றோம்னு கடவுள் மேல பழியைப் போட மாட்டீங்களே?

balebalu
ஜவான் படத்தை இந்தியில் தான் பார்த்தேன். இது இந்தி திணிப்பா? ~ அண்ணாமலை
“ஜவான்” படம் தான் தமிழிலும் வந்ததே
அதை எதுக்கு மெனக்கட்டு ஹிந்தியில் போய் பார்க்கணும்
அப்புறம் ஏன் திணிப்பு ன்னு புலம்பணும்
கவிதை குறவஞ்சி
தட் திண்டுக்கல்லன்ஸ்…
எல்லாரும் பொங்கல் பரிசு 1000 வாங்கிட்டு இருக்கும் போது,
அடிக்கிற மழைக்கு அந்த ’6000’ ரூபா டோக்கன் தேடுது மனசு…
#DindugulRains
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share