அசோக் செல்வன், சாந்தனுவின் கிரிக்கெட் மோதல்: ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் எப்படி?

Published On:

| By christopher

How Blue Star Trailer?

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் ஜெயகுமார் இயக்கத்தில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், பிரித்விராஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 10) ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் அசோக் செல்வனின் கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித், சாந்தனு கதாபாத்திரத்தின் பெயர் ராஜேஷ்.

கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகிய இருவரும் எப்படி சமாளித்து வெற்றி பெறுகின்றனர் என்பதே ப்ளூ ஸ்டார் படத்தின் ஒன் லைன் கதை.

ப்ளூ ஸ்டார் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ’யார் கிட்ட தோத்தோம்னு பார்க்க கூடாது… ஏன் தோத்தனு பார்க்கும்’ நம்மள ஏதாவது ஒன்னு அழ வச்சதுனு வச்சிக்கோயேன், அதுக்கு நாம உண்மையா இருக்கோம்னு அர்த்தம்டா’ போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

முழுமையடையாத ராமர் கோயிலில் குடமுழுக்கு : காங்கிரஸ் நிராகரிப்பு!

போராட்டம் ஒத்திவைத்தற்கான காரணம்: சிஐடியூ சவுந்தரராஜன் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel