இந்த மாதம்… வாரிசு மோதல் மாதம் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே நண்பர் சந்தோசமா உட்கார்ந்து டீ குடிச்சிட்டு இருந்தாரு.

என்னானு கேட்டா, ‘மாப்ள வீட்டு பத்திரம் யாருக்குனு பெரிய போட்டி போய்கிட்டு இருந்துச்சு. இன்னைக்கு நான் தான் வீட்டோட மூத்த புள்ளனு பத்திரம் எழுதி வாங்கிட்டேன். எங்க அப்பனே அடிச்சி பத்திட்டேன். இனி நாம தான் அப்படி”னு எந்த வித கூச்சமும் இல்லாம குஷியா பேசுனாரு.

ADVERTISEMENT

அடப்பாவிகளா.. அரசியல தான், ராமதாஸ் – அன்புமணி, வைகோ – துரை வைகோ போட்டி போய்கிட்டு இருக்குனு பாத்தா, நீங்களும் இப்படி ஆயிட்டீங்களே நொந்துட்டு வந்துட்டேன். update kumaru memes and trolls april 19

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 19

ADVERTISEMENT

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நிறைய பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கறதே, ஹோட்டல்லயும் ஜூஸ் கடைகள்லயும் வெரைட்டியா ஆர்டர் பண்ணிட்டு டேஸ்ட் புடிக்காத ஐட்டத்தை தலையில கட்ட ஒரு இளிச்சவாயன் வேணும்னு தான்..

ADVERTISEMENT

✒️Writer SJB✒️

சராபுதீன் வழக்கில் அமித்ஷா குற்றவாளி இல்லை என தீர்ப்பு சொன்னா இனிக்கிது

கோத்ரா கலவரத்தில் மோடி குற்றவாளி இல்லை என தீர்ப்பு சொன்னா இனிக்குது

பாபர் மசூதி இடிப்பில் அத்வானி குற்றவாளி இல்லை என தீர்ப்பு சொன்னா இனிக்குது

வக்பு போர்டு தீர்ப்பு மட்டும் கசக்குதோ..?

வேலு

கல்யாண விருந்துல ரசம் இல்லன்னு ஒருத்தன் கல்யாணத்தை நிறுத்திட்டான் தம்பி,,

யாரோ ஒருத்தன் கல்யாணம் நின்னு போனதுக்கு நீங்க ஏன் கதறி அழுறீங்க..?

எனக்கு இந்த ஐடியா வராம போச்சே தம்பி..!!!

வாழமட்டை

ஒரு வைரம் உருவாக எத்தனை வருஷம் ஆகும் சார்..?

பல நூறு வருஷம் ஆகும் தம்பி,,

உங்களால மட்டும் எப்படி பத்தே மாசத்துல முடிஞ்சது சார்..???

குமரேசன்

நம் நாட்டிலேயே மிகவும் மதிப்பு மிக்கவர் ஜனாதிபதி- துணை ஜனாதிபதி பேச்சு

அப்புறம் ஏன் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அவரை அழைக்கவில்லை..?

கடைநிலை ஊழியன்

இந்த IT ல வேல பாக்குறவன் கூட, வாரத்துல 3,4 நாளு ஆபீஸ்க்கு போக ஆரம்பிச்சுட்டான்..

ஆனா, அண்ணா வீட்ட விட்டு வெளிய வர மாட்டீங்கிறாரு..

சூர்யா

me – இந்த வேலையே பிடிக்கல.. ரொம்ப வேல குடுக்குறாங்க.. வேற வேலை தேடனும்..

also me – interview க்கு prepare பண்ணவே டைம் இல்ல.. வேலை அதிகமா இருக்கு..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share