இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். டீ மாஸ்டர் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு… அவருகிட்ட என்னனு போய் கேட்டேன்.
அதுக்கு அவரு, ஒவ்வொரு மாசமும் கமர்ஷியல் சிலிண்டரு விலை ஏத்திட்டு இருந்தாங்க… நம்ம கடைக்கு வர்ற ஒரு பாஜககாரர், “அண்ணே சிலிண்டரு விலை ஏத்திட்டாங்க… டீ விலையும் ஏத்துவீங்க… ஜாலி தான் போங்க” அப்படினு சொல்லிட்டு போவாரு..
இன்னைக்கு அந்த பாஜககாரர் கைல கட்டு போட்டு வந்தாரு… ’அண்ணே கைக்கு என்னாச்சு?’னு கேட்டேன்.
”அட நீ வேறய்யா, வீட்டு கேஸ் சிலிண்டர் விலை 50 ரூ ஏத்துன செய்திய டிவில பாத்துட்டு, மோடி பக்தில கைத்தட்டிடேன். அத பாத்து கடுப்பான என் பொண்டாட்டி பூரிக் கட்டையை தூக்கி எறிஞ்சிட்டா”னு சோகமா சொல்றாரு.
’நல்ல வேல, அந்தம்மா காய்கறி வெட்டல’னு சொன்னேன்… டீக்கடக்காரர் சிரிக்குறாரு. update kumaru memes and trolls apr 8
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls apr 8

மாயவரத்தான் கி ரமேஷ்குமார்
ஏண்ணே நாதஸை அடிக்குறீங்க?
பின்ன என்னப்பா.. நேத்து ஊட்டிக்கு போன திமுககாரங்க, வாகனங்களுக்கெல்லாம் E pass வாங்கிட்டுத்தானே போயிருப்பாங்கன்னு என்கிட்ட வந்து கேட்குறாம்பா!

Joe…😎😎
யோவ் ஆளுநரே,
சட்டமன்றம் போனாலும் அடி வாங்குறே,
நீதிமன்றம் போனாலும் அடி வாங்குறே,
எதுக்கு இப்படி?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
போன ஐபிஎல் வரை டெல்லி பஞ்சாப் லக்னோ விளையாடற மேட்ச் எல்லாம் டிவில ஸ்கோர் கூட பார்க்க தோணாது..
புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைச்ச ஐபிஎல் இதுதான்டா..

கோவிந்தராஜ்
MI ~ நாங்க போராடி தோத்தோம் உங்கள மாதிரி Test ஆடி தோக்கல…
💛: இன்னைக்கு இதே மாதிரி போராடி தோத்து காட்றோம் பாக்குறியா…

Mannar & company™🕗
நீ ஏன் காஸ் சிலிண்டர் விலையை ஏத்திட்டாங்கன்னு வருத்தப்படுற..
நாம அம்பானி அதானிகளோட வளர்ச்சிக்கு பாடுபடுறதா நினைச்சுக்க!!

Raghavan Alagar
கேஸ் சிலிண்டர் விலை மிகவும் குறைவானது – தமிழிசை
ஆத்தா உனக்கு எல்லாம் ஓசி ல வருது… கவலை இல்லை
சாமானிய மக்கள் என்ன செய்ய முடியும்…. ஆயிரம் ரூபாய் ஆகிறது

Er.NithanKrish B.E.,
சீமானுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை -அண்ணாமலை
~ஆமா.. அவரு பொய்ய பயங்கரமா பேசுவாரு! இவரு பயங்கரமா பொய் பேசுவாரு..

ArulrajArun
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
விடுப்பா விடுப்பா ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் ஐம்பது ஐம்பது ரூபாயா விலையை ஏத்துறதும் , ஆட்சி முடியுறப்போ 5 அஞ்சு ரூபாயா விலையை குறைக்கிறதும் சகஜம் தானே…