குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!

Published On:

| By christopher

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மத்திய அரசு இன்று (ஏப்ரல் 15) அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் (2016) செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தன.

இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் இதுவரை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன.

ADVERTISEMENT

அமைச்சர்கள் மற்றும் டிஜிபி என்று வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த சிபிஐ சிறப்பு நீதிபதி மலர்வாலன்டினா, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

அதேபோல சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரிடமும் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ள்னர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பெங்களூரு அணியில் மாற்றம்: டூ பிளஸிஸ் திட்டம் வெற்றி பெறுமா?

மதுபான ஊழல்: விசாரணை வளையத்தில் கெஜ்ரிவால் சிக்கியது எப்படி?

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share