யூ.ஜி.சி அப்டேட் 2026: ஆன்லைன், டிஸ்டன்ஸ் கோர்ஸ்களுக்கு அப்புரூவல் விண்ணப்பங்கள் திறப்பு

Published On:

| By Santhosh Raj Saravanan

ugc online odl course accreditation 2026

யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (University Grants Commission – UGC), 2026–27 கல்வியாண்டிற்கான ஓபன் அண்ட் டிஸ்டன்ஸ் லெர்னிங் (Open and Distance Learning – ODL) மற்றும் ஆன்லைன் கோர்ஸ்கள் (online programmes) வழங்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களிடம் விண்ணப்பங்களை அழைத்துள்ளது.

இந்த முயற்சி, இந்தியாவில் ஃப்ளெக்சிபிள் எட்யுகேஷன் (flexible education) வாய்ப்புகளை அதிகரிக்கவும், டிஜிட்டல் கற்றல் முறையை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 11, 2026 மற்றும் டாக்குமெண்ட் சமர்ப்பிப்பு (document submission) கடைசி தேதி,  மே 20, 2026 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் (recognised higher educational institutions – HEIs), யூ.ஜி.சி விதிமுறைகள் (UGC regulations 2020) பூர்த்தி செய்த நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ADVERTISEMENT

இதற்கு விண்ணப்பிக்க, டிஸ்டன்ஸ் எட்யுகேஷன் பியூரோ போர்டல் (Distance Education Bureau – DEB portal) மூலம், ஆன்லைன் விண்ணப்பம் (online application) சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்புரூவல் எப்படி வழங்கப்படும்?

யூ.ஜி.சி கூறுவது என்னவென்றால், அனைத்து விண்ணப்பங்களும் கடுமையான சரிபார்ப்பு (strict scrutiny) செய்யப்படும், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (infrastructure), ஃபாகல்டி (faculty), டெக்னாலஜி சப்போர்ட் (technology support), ஸ்டடி மேட்டீரியல் (study material). இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் அப்புரூவல் (approval) வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
முக்கிய அறிவுரை

விண்ணப்பம் செய்தால் மட்டுமே அப்புரூவல் கிடைக்கும் என்று அர்த்தமில்லை, தரநிலைகள் (quality standards) பூர்த்தி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும், நிறுவனங்கள் டி.இ.பி போர்டல் அப்டேட்ஸ் (DEB portal updates) தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஆன்லைன் கல்வி (online education) விரிவாக்கம், மாணவர்களுக்கு தொலைநிலை கற்றல் வாய்ப்பு (distance learning access), உயர்கல்வி அணுகலை (higher education access) எளிதாக்குதல் என்பதாகும்.

யூ.ஜி.சி வெளியிட்ட இந்த அறிவிப்பு, இந்தியாவில் ஆன்லைன் மற்றும் டிஸ்டன்ஸ் எட்யுகேஷன் வளர்ச்சிக்கு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share