VIDEO: உதயநிதி கைதுக்கு காரணமான பேச்சு இதுதான்!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin Speech

தஞ்சாவூரில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி திமுக சார்பில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் உதயநிதி பேசியதாவது: 2021-லிருந்து 2025 வரை அன்றைய முதலமைச்சரான நம்முடைய தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையைத் தானே சென்று திறந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னதாகவே மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு என்ன நிலைமை?

ADVERTISEMENT

ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.

ஜூன் மாசத்துல 9.9 டி.எம்.சி தண்ணீர்… ஜூலை மாசத்துல 33 டி.எம்.சி தண்ணீர்… அப்படின்னு மொத்தம் 42 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வந்திருக்கணும். இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல.

ADVERTISEMENT

ஆனா இதைப்பத்தி முதலமைச்சர் வாய் திறந்து பேசுறாரா? பேசுறது கிடையாது. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே எண்ணம்… திமுக-மேல என்ன பொய் வழக்கு போடலாம்? என்ன பொய் கேஸ் போடலாம்?

(கூட்டத்தில் சிலர் ‘திரிஷா… திரிஷா…’ என்று கத்த) எங்க தண்ணி வருதோ இல்லையோ… அங்க தண்ணி வரணும்… நான் காவிரியை சொன்னேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ADVERTISEMENT

இந்த பேச்சுக்குதான் தற்போது உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி பேச்சு- VIDEO

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share