எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படும் விவகாரத்தை வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவுக்கு எதிராக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்தனர்.
உதயநிதி வீட்டின் அருகே நடக்கும் இந்த சம்பவங்களை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்தார்.
அதாவது திமுகவினர் திரண்டது, காவல்துறையினர் வந்து செல்வது ஆகியவற்றை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த திமுகவினர் சஞ்சீவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் அவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
