கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை.. ஆபாச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்கு!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin booked under 9 sections

முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரம்:

ADVERTISEMENT

BNS 196: சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் செயல்

BNS 192: பொது அமைதியைக் குலைக்கும் வகையில், கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் ஆத்திரமூட்டுவது

ADVERTISEMENT

BNS 352: பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அல்லது குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டே ஒருவரை அவமதிப்பது

BNS 79: பெண்ணின் கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைக்கும் வகையில் வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுதல்

ADVERTISEMENT

BNS 296(b): பொது இடங்களில் ஆபாசமான பாடல்களைப் பாடுதல் அல்லது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்

BNS 61: குற்றத்தைச் செய்வதற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஈடுபடும் குற்றவியல் சதி

BNS 351(2): குற்ற நோக்கத்துடன் மிரட்டல் விடுவித்தல்; ஒருவருடைய நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதாக மிரட்டுவது

தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், 2002 – பிரிவு 4: பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை அல்லது தொல்லைகளைத் தடுத்தல்

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 – பிரிவு 67: மின்னணு வடிவத்தில் ஆபாசமான தகவல்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல்

ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ”உதயநிதியின் பேச்சு வலைதளங்கள் மூலம் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளதுடன், பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.

தங்களது அரசியல் செல்வாக்கு மற்றும் பொது செல்வாக்கை பயன்படுத்தி, இவ்வழக்கின் உண்மை நிலைகளை அறிந்துள்ள சாட்சிகளை தூண்டவோ, மிரட்டவோ, அவர்களது வாக்குமூலங்களை மாற்றும்படி நிர்பந்திக்கவோ, அல்லது விசாரணையில் குறுக்கீடு செய்யவோ வாய்ப்புள்ளதாலும், உண்மையான தகவல்கள் காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றடைவதைத் தடுக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக கருதப்படுகிறது.

தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், சமூக வலைதள பதிவுகள், டிஜிட்டல் தரவுகள் மற்றும் இதர சான்றுகளை அழிக்கவோ, மாற்றம் செய்யவோ, மறைக்கவோ அல்லது அவற்றில் தலையிடவோ வாய்ப்புள்ளதாலும், அவற்றை பாதுகாத்து முறையான புலன்விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது.

தங்களது குற்றச்சாட்டுக்குரிய பேச்சின் காரணமாக இரு தரப்பினரிடையேியும் பதற்றம் நிலவி வருவதுடன், பொது அமைதி சீர்குலைவு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share