தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை ஒருவர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. மேலும், அவருக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தொண்டர்களின் முற்றுகைப் போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துப் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சற்று முன் உதயநிதி ஸ்டாலின் கைது செய்துள்ளனர். இந்நிலையில் உதயநிதி இல்லம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் அழைத்துச்செல்லும் வாகனத்தை தடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் காவிரி பிரச்சனையை மடை மாற்றவே காவல்துறை என்னை கைது செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனைகள் வரும் போது இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது. பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது.
விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது. திமுகவின் கடைசி தொண்டன் கூட இது போன்ற நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான். நீதிமன்ற முடிவுக்கு தலை வணங்குகிறேன். சட்டப்படி இதை சந்திப்போம் என்றார்.
